மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இன்று பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர், இஸ்ரேல் – ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கு இடையேயான போராக உருமாறியது. தற்போது, இஸ்ரேல் – ஈரான் இடையே கடும் சண்டை துவங்கியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவு நாடுகள் குரல் கொடுப்பதால், மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதைத்தொடர்ந்து, ஒரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் நிலையில், ஹெஸ்பொல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக்கியது.
இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி இன்று பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் குழு மற்றும் உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில் ராணுவம், நிதி, வெளியுறவுத்துறைகளின் மத்திய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனை முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |