ஹரியானா தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் அதிகம் பேர் வாக்களித்து புதிய வாக்களிப்பு சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹரியானாவில் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு ஒரே கட்டமாக இன்று (அக்.5) காலை 7 மணிக்கு தொடங்கியது. ஓட்டுப்பதிவு தொடங்கியது முதல் நீண்ட வரிசையில் நின்று ஆண், பெண் வாக்காளர்கள் ஓட்டு போட்டு வருகின்றனர்.
இந் நிலையில் பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது;
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த ஜனநாயகத்தின் புனிதமான திருவிழாவில் பங்கேற்று வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறு வாக்காளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்க உள்ள அனைத்து மாநில இளம் நண்பர்களுக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |