நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்குள், இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.40 சதவீதமாக சரிந்ததை தொடர்ந்து, நாட்டின் பொருளாதார நிலை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்ததாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் போது, நாட்டில் பொதுத் தேர்தல் நடந்தது. தேர்தல் காலகட்டத்தின் போது, கொள்கை முடிவுகள் மேற்கொள்வது, அதனை செயல்படுத்துவது போன்றவை பாதிப்புக்குள்ளாவது இயல்பே. இதனால் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கான செலவினம் குறைந்து, வளர்ச்சி சரிந்தது. இதன் பிரதிபலிப்பே இரண்டாம் காலாண்டு முடிவில் வெளிப்பட்டது.
ஆனால், நடப்பு காலாண்டின் பொருளாதார தரவுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. மீண்டெழுந்துள்ள உள்கட்டமைப்பு செலவு உள்ளிட்டவற்றின் காரணமாக, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |