மின்னணு வணிகத்தின் வளர்ச்சி மக்களை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும் -பியூஷ் கோயல்

மின்னணு வணிகத்தின் வளர்ச்சி குடிமக்களை மையமாகக் கொண்டதாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பஹ்லே இந்தியா அறக்கட்டளையின் ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வோர் நலனில் மின்னணு வர்த்தகத்தின் நிகர தாக்கம்’ என்ற அறிக்கையை வெளியிட்டு பேசிய அமைச்சர், மின்னணு வர்த்தகத்தின் வளர்ச்சி, சமூகத்தின் பெரும் பிரிவினரிடையே பயன்கள் பகிர்ந்தளிப்பதை ஜனநாயகப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.

தொழில்நுட்பம் என்பது அதிகாரமளித்தல், புதுமைப்படுத்துதல் மற்றும் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு வழிமுறை என்று திரு கோயல் கூறினார். ஆனால் இந்த வளர்ச்சி ஒரு ஒழுங்கான முறையில் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், சந்தைப் பங்கிற்கான போட்டியில், நாடு முழுவதும் உள்ள 100 மில்லியன் சிறு சில்லறை விற்பனையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று கூறினார்.

இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், இன்னும் உறுதியான நடவடிக்கை தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தையும் திரு கோயல் அடிக்கோடிட்டுக் காட்டினார். “எங்கள் உதவிக்கு இன்னும் தகுதியான ஒரு பெரிய பிரிவு அங்கே உள்ளது. இந்தியாவின் எதிர்காலத்திற்கான வேலைகள் மற்றும் வாய்ப்புகள் என்று வரும்போது, நாம் அனைவரும் நம் பங்கை ஆற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன், “என்று அவர் கூறினார்.

இந்தியாவின் பாரம்பரிய சில்லறை விற்பனைத் துறையில் மின்னணு வணிகத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்தும், வேலைவாய்ப்பில் அதன் தாக்கம் குறித்தும் திரு கோயல் கவலை தெரிவித்தார். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சந்தையின் பாதி மின்னணு-வணிக கட்டமைப்பின் ஒரு பகுதியாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சர் எடுத்துரைத்தார், இது “கவலைக்குரிய விஷயம்” என்று அவர் விவரித்தார்.

மின்னணு வர்த்தகத்தின் பரந்த தாக்கங்களை பிரதிபலிக்கும் வகையில், அதன் தாக்கம் குறித்து நடுநிலையான மற்றும் தரவு அடிப்படையிலான பகுப்பாய்வை திரு கோயல் வலியுறுத்தினார். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசிய திரு கோயல், மின்னணு வணிகத்தின் வளர்ச்சி காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் பாரம்பரிய கடைகள் வீழ்ச்சியடைந்து வருவதைக் குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்து மின்னணு வணிக விஷயத்தில் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“நான் மின்னணு வணிகத்தை விட்டுவிட விரும்பவில்லை. ஆனால் அதன் பங்கு குறித்து நாம் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் சிந்திக்க வேண்டும்” என்று திரு கோயல் வலியுறுத்தினார்.

உள்ளூர் வணிகங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், குறிப்பாக மருந்தகங்கள் மற்றும் மொபைல் போன் பழுதுபார்க்கும் கடைகள் போன்ற துறைகளில் மின்னணு வணிகத்தின் தாக்கம் குறித்து அமைச்சர் தமது கவலையை வெளிப்படுத்தினார். தமது உரையை நிறைவு செய்த அவர், நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப மின்னணு வணிகத்தின் தாக்கத்தை விரிவாகவும், விஞ்ஞான ரீதியாகவும் கவனமாக ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வர்த்தக சமூகத்தினரையும், நிபுணர்களையும் வலியுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...