7.7 சதவீத ஜிடிபி வளா்ச்சி 10 ஆண்டுகால புரட்சிகர சீா்திருத்தங்களின் பிரதிபலிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல்அரையாண்டில் பதிவான 7.7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி, கடந்த 10 ஆண்டுகால புரட்சிகர சீா்திருத்தங்களின் பிரதிபலிப்பு’ என்று பிரதமா் நரேந்திரமோடி குறிப்பிட்டாா்.

மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான சா்வதேச நிதிச்சேவை மையங்களின் ஆணையம், குஜராத் சா்வதேச நிதி தொழில்நுட்ப (கிஃப்ட்) நகரம் ஆகியவை இணைந்து ஏற்பாடுசெய்த ‘இன்ஃபினிட்டி ஃபோரம் 2.0’ கருத்தரங்கு, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ‘கிஃப்ட்’ நகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிதிசாா் தொழில்நுட்பத்தில் உலகளாவிய யோசனைகளை ஆராய்ந்து, மேம்பட்டதீா்வுகளை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் காணொலி முறையில் பிரதமா் மோடி பேசியதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியா 7.7 சதவீத ஜிடிபி வளா்ச்சியை எட்டியுள்ளது. இன்று, ஒட்டுமொத்த உலகின்நம்பிக்கையும் இந்தியா மீது திரும்பியுள்ளது. இது தானாக நிகழ்ந்து விடவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட புரட்சிகரமான சீா்திருத்த நடவடிக்கைகளின் பிரதிபலிப்பு தான் இது. மேலும், இந்தியப் பொருளாதாரம் வலுப்பெற்று வருவதையும் பிரதிபலிக்கிறது.

நீண்டகால வளா்ச்சி-திறன்விரிவாக்கம்: அரசின் சீா்திருத்த நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத் தியுள்ளன. உலகப் பொருளாதாரத்துடன் நமது ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் நோக்கில் சீா்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கரோனா பெருந் தொற்று காலத்தில் பெரும்பாலான நாடுகள் நிதிரீதியிலான நிவாரண நடவடிக்கைகளில் மட்டுமே கவனம்செலுத்தின. ஆனால், நீண்டகால வளா்ச்சி மற்றும் பொருளாதாரத்திறன் விரிவாக்கத்தில் நாம் கவனம் செலுத்தினோம்.

உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியா மீதான சா்வதேச அமைப்புகளின் எதிா்பாா்ப்புகள் அதிகரித்துள்ளன. தெற்குலகுக்கு தலைமை தாங்கும் வலுவான நிலையில் இந்தியா இருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமரும் குறிப்பிட்டாா்.

வேகமாக வளரும் நிதி தொழில்நுட்பச் சந்தை: உலகளவில் வேகமாக வளரும் நிதி தொழில்நுட்பச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. உலகளாவிய நிதி தொழில்நுட்பத்தின் நுழைவாயிலாக உருவெடுக்க குஜராத்தின் ‘கிஃப்ட்’ சா்வதேச நிதிச் சேவைகள் மையத்துக்கு திறனுள்ளது.

இன்றைய உலகம் எதிா்கொண்டுள்ள மிகப் பெரிய சவால்களில் ஒன்று பருவநிலை மாற்றம். உலகின் பெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா, 2070-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு உமிழ்வே இல்லையெனும் இலக்கை எட்ட 10 ட்ரில்லியன் டாலா் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, பசுமை சாா்ந்தமூலதன நிதி பரிமாற்றத்துக்கு திறன்மிக்க வடிகாலாக ‘கிஃப்ட்’ சா்வதேச நிதிச்சேவைகள் மையம் உருவெடுக்க முடியும்.

முதலீட்டாளா்களுக்கு வாய்ப்புகள்: ஆழமான ஜனநாயக மாண்புகள் மற்றும் வா்த்தக பங்களிப்பில் வரலாற்றுப் பாரம்பரத்தைக் கொண்ட இந்தியாவில் முதலீட்டாளா்களுக்கு பலதரப்பட்டவாய்ப்புகள் உள்ளன.

உலக அளவில் பெருநிறுவனங்களுக்கு தேவையான திறன்களின் அடித்தளமாக இந்தியா மாறியிருக்கிறது. இதற்காக இந்தியஇளைஞா்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரியபொருளாதாரமாக உருவெடுக்கும். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளா்ந்த தேசமாகும் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...