ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் பரபரப்பான கிறிஸ்துமஸ் சந்தையில் சொகுசு கார் புகுந்ததில், ஐந்து பேர் பலியாகினர்; 70 பேர் காயமடைந்தனர். காரை தாறுமாறாக ஓட்டிய சவுதி அரேபியா டாக்டர் கைது செய்யப்பட்டார்; இதில் பயங்கரவாதிகளின் பின்னணி உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் இந்தியர்கள் ஏழு பேரும் காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன, பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம்.
அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்து கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |