பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று (டிச.,21) குவைத் புறப்பட்டு சென்றார். ‘இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று (டிச.,21) பிரதமர் மோடி குவைத் புறப்பட்டு சென்றார். கடந்த 43 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் குவைத் செல்வது இதே முதன்முறை. இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்திய தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாமிற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிடுகிறார். குவைத் வாழ் இந்தியர்களிடம் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்றும், நாளையும் நான் குவைத் செல்கிறேன். இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும். குவைத் நாட்டின் இளவரசர் மற்றும் குவைத் பிரதமரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இன்று மாலை நான் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாடுவேன், அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிலும் கலந்துகொள்வேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |