ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கான மசோதாவை மத்திய அரசு, லோக்சபாவில் இன்று தாக்கல் செய்கிறது. இதையொட்டி எம்.பி.,க்களுக்கு கட்டாயம் அவையில் இருக்கும்படி பா.ஜ., உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று மசோதா தாக்கல் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், இந்த மசோதாவின் நகல் எம்.பி.,க்கள் மத்தியில் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ம் தேதி முடிவடைவயும் நிலையில், மத்திய அரசு தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது.
முன்னதாக, மத்திய அமைச்சரவை டிசம்பர் 12 அன்று மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், லோக்சபா மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்த இந்த மசோதா பரிந்துரைக்கிறது.
இதுதொடர்பாக பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு பார்லிமென்ட் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது.
இதனிடையே இன்று இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டிய சில முக்கியமான அலுவல்கள் இருக்கும் நிலையில், தங்கள் கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் அவையில் இருக்குமாறு பா.ஜ., அறிவுறுத்தி உள்ளது.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |