2025ல் தேசிய தேர்வு முகமை முற்றிலுமாக மாற்றப்படும். உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும். ஆட் சேர்ப்புத் தேர்வுகளை நடத்தாது’ என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தேசிய தேர்வு முகமை மத்திய அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டு நவம்பர் 2017ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் முதன்மை பணி இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு, நுழைவுத் தேர்வுகளை நடத்துவது தான். இந்நிலையில், 2025ல் தேசிய தேர்வு முகமை முற்றிலுமாக மாற்றப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர தெரித்துள்ளார்.
இது குறித்து, தர்மேந்திர பிரதான் கூறியதாவது: 2025ல் தேசிய தேர்வு முகமை மறுசீரமைக்கப்படும். பத்து புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். 2025ம் ஆண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும். ஆட் சேர்ப்புத் தேர்வுகளை நடத்தாது.
நீட் தேர்வை பேப்பர் முறையில் நடத்துவதா அல்லது ஆன்லைனில் நடத்துவதா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு விரைவில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |