” வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரின் சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த பணம் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது”, என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
லோக்சபாவில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மோசடியாளர்களிடம் இருந்து ரூ.22, 280 கோடி பணத்தை அமலாக்கத்துறை வெற்றிகரமாக மீட்டு உள்ளது. அதில் முக்கியமான வழக்குகளை மட்டும் கூறுகிறேன்.
விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.14,131.6 கோடி வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
நீரவ் மோடி சொத்துகளை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.1,052. 58 கோடியும்
தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் கழக ஊழல் தொடர்பாக பறிமுதல் சொத்துகள் விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.17.47 கோடியும் வங்கிகளுக்கு திரும்பியது.
எஸ்ஆர்எஸ் நிறுவனங்கள்- ரூ.20.15 கோடி
ரோஸ்வேலி நிறுவனம் – ரூ.19.40 கோடி
சூர்யா பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் – ரூ.185.13 கோடி
நவேரா சேக் உள்ளிட்டவர்கள் – ரூ.226 கோடி
நாயுடு அம்ருதேஷ் ரெட்டி- ரூ.12.73 கோடி
மெகுல் சோக்சி – ரூ.2,565.90 கோடி
நபிசா ஓவர்சீஸ் உள்ளிட்டவர்கள்- ரூ.25.38 கோடி வங்கிகளுக்கு திரும்பி உள்ளது.
பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாரையும் விடவில்லை என்பது முக்கியமான விஷயம். வங்கிகளில் இருந்து சென்ற பணம், மீண்டும் வங்கிகளுக்கே திரும்பும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
பல வங்கிகளில் கடன் வாங்கி ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் உள்ளார். அதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்சி ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தார், நீரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மெகுல் சோக்சி, தற்போது ஆண்டிகுவாவில் உள்ளார்.
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |