மாநிலங்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை -நிர்மலா சீதாராமன்

புதுடில்லி, ”பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறித்து பொய்யான தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்ப வேண்டாம். எந்த மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை,” என, எதிர்க்கட்சிகளிடம் தெரிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முந்தைய பட்ஜெட் உரையை நினைவுபடுத்தி லோக்சபாவில் நேற்று காரசாரமாக பேசினார்.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2024 – 25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ஆந்திராவுக்கு 15,000 கோடி ரூபாயும், பீஹாருக்கு 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது கடும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மேலும், பட்ஜெட் உரையில் தமிழகம் உட்பட 17 மாநிலங்களின் பெயர்கள் கூட இடம் பெறவில்லை என விமர்சித்த எதிர்க்கட்சிகள், பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிப்பதாக குற்றஞ்சாட்டின.

தன் பட்ஜெட் நிறைவு உரையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்தார். அவர் பேசியதாவது:

இந்த பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. அப்படியொரு தோற்றத்தை உருவாக்க, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்க சவால் விடுக்கிறேன்… அவர்கள் இதுவரை தாக்கல் செய்த பட்ஜெட்களில் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளனரா?

கடந்த 2004 – 05ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில், 17 மாநிலங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. அந்த மாநிலங்களுக்கு நிதி சென்று சேரவில்லையா? அப்படி அவர்கள் நிதியை நிறுத்தி வைத்து இருந்தால் இப்போது எங்களிடம் கேள்வி கேட்கலாம்.

அதேபோல, 2005 – 06 பட்ஜெட்டில் 18 மாநிலங்களின் பெயர்களும், 2007 – 08ல் 16 மாநிலங்களின் பெயர்களும், 2009 – 10ல் 20 மாநிலங்களின் பெயர்களும் விடுபட்டு இருந்தன.

பட்ஜெட்டில் பெயர் இடம் பெறாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என பொய் பிரசாரம் செய்து மக்களை திசை திருப்பாதீர்கள்.

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக நாம் உள்ளோம். கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மூலதன செலவின உந்துதல் காரணமாக, பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீண்டுள்ளோம்.

இலக்கு நிர்ணயம்

கடந்த 2023 – 24ல் நிதிப் பற்றாக்குறை, 5.6 சதவீதமாக இருந்தது; இதை, 4.9 சதவீதமாக குறைக்க நடப்பு நிதியாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; 2025 – 26ல், 4.5 சதவீதமாக குறையும்.

இந்த பட்ஜெட்டில் ஜம்மு – காஷ்மீருக்கு 17,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஜம்மு – காஷ்மீர் போலீஸ் துறையின் செலவுக்கான 12,000 கோடி ரூபாயும் அடங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின், 2024 – 25ம் நிதியாண்டுக்கான 48.21 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட், லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...