கிராமப்புறங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ரூ.2,516 கோடி மதிப்பீட்டில் கணினி மயமாக்கப்படவிருப்பதாக மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், இந்த்த் திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நபார்டு வங்கியுடன் இணைக்கப்படுவதுடன், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் இதுவரை ரூ.794 கோடி பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 13 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்குவதன் வாயிலாக கூட்டுறவு கடன் அமைப்புகளை நீண்ட காலத்திற்கு வலுப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளர். இத்திட்டத்தின் கீழ், இதுவரை 8 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு வன்பொருள் வாங்கவும், டிஜிட்டல் மயமாக்கவும் மத்திய அரசின் பங்காக ரூ.4.26 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்க தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்ற தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், எந்தவொரு கிளையிலும் பரிமாற்றம் செய்யத்தக்க கோர் பேங்கிங் முறை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |