விவசாயிகள் குறித்து காங்., முதலைக் கண்ணீர் வடிக்கிறது என லோக்சபாவில் , மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன் கூறினார்.
பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது
*தற்போது தாக்கல் ஆன பட்ஜெட் மிஷன் 2047 க்கான முதல் படியாகும்.
*பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.48.21 லட்சம் கோடி
*கோவிட் காலத்தில் மத்திய அரசின் துரித நடவடிக்கையால் மீண்டெழுந்தோம்
*சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு
*2014 ஐ விட விவசாய துறைக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
*சுகாதாரத்துறைக்கு 1.36 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*பட்ஜெட்டில் எந்த துறைக்கும் நிதி குறைக்கப்படவில்லை. கல்விக்கான ஒதுக்கீடும் உயர்த்தப்பட்டு உள்ளது.
*நகர்ப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
*இந்தியாவை வேகமாக வளரும் பொருளாதார நாடாக மக்கள் மாற்றி உள்ளனர்.
*நிதிப்பற்றாக்குறை, நாட்டின் ஜிடிபி.,யில் 4.9 சதவீதமாக இருக்கும்.
*காஷ்மீரை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 42,277 கோடி ரூபாய் காஷ்மீர் மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை 5.7 சதவீதமாக குறைந்துள்ளது.
*2047 க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே எங்களது நோக்கம்.
*இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு உள்ளதாக கூறுவது தவறு
*பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால், அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என அர்த்தமில்லை.
*தவறான புரிதலோடு சிலர் கருத்து வெளியிடுகின்றனர்.
*தவறான கருத்துகளை பரப்பும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு உள்ளன.
*சிலர் கூறிய தவறான கருத்துகள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
*ஐமுகூ ஆட்சி பட்ஜெட்டிலும் ஒவ்வொரு மாநிலத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
*2004-05 பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இல்லை. அதற்காக அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லையா
*2006-07 பட்ஜெட்டில் 13 மாநிலங்களின் பெயர் இல்லை.
*2009- 2010 ஆண்டுகளில் 2 மாநிலங்களின் பெயர் மட்டுமே இருந்தது.
*நீங்கள் செய்தால் தவறில்லை. நாங்கள் செய்தால் மட்டும் தவறா
*மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டுகின்றன
*பல்வேறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கேரளாவிற்கு பெரிய நெடுஞ்சாலை திட்டம்அறிவிப்பு
*கேரளாவின் விழிஞம் துறைமுகம் அதானிக்கு ஒப்படைக்கப்பட்ட போது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. லோக்சபாவில் ஏ1 ஏ2 எனக்கூறியவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை
*ஐமுகூ ஆட்சியில் வேலைவாய்ப்பு குறித்து காங்., விவாதிக்கவில்லை.
* விவசாயிகளை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.
*குறைந்தபட்ச ஆதார விலையை ஐமுகூ., ஏற்றுக் கொள்ளவில்லை.
*விவசாயிகள் குறித்து காங்கிரஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறது
* ஐமுகூ., ஆட்சியின் போது வேலைவாய்ப்பின்மை குறித்து காங்கிரஸ் விவாதிக்க மறுத்தது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |