ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

 சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் பெறுவதற்கும், தாது பலம் அதிகரித்து நல்ல ஆண்மை பெற்றுச் சிறப்பதற்கும் இது நல்ல மருந்தாகும்.

இதன் இலைகளைக் கொண்டு வந்து நன்கு சுத்தம் செய்து, அம்மியை நன்கு கழுவி அதில் வைத்து அரைத்து வைத்துக் கொண்டு, சிறிய கொட்டைப்பாக்களவு எடுத்து, வெள்ளாட்டுப் பாலில் கலக்கி அதன்பின்னர் வடிகட்டிக் கொடுக்க வேண்டும்.

சகலவிதமான விஷங்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் தீரும். பிளவை, படும்புண், குஷ்டம் இவை குணமாகும்.

அரணை கடித்தால் பிழைக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அரணை கடித்தவுடன் மேற்சொன்ன முறையில் கொடுத்தால் பிழைக்க வைத்து விடலாம்.

குஷ்டம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், தொடர்ந்து காலை வேளையில் நாற்பத்தெட்டு தினங்கள் கொடுத்து வர நிச்சயம் குணம் கிடைக்கும்.

இவ்விதம் உட்கொள்ளும்போது மிளகைப் பசும்பாலிட்டு அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். இவ்விதம் உட்கொள்ளும்போது நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது; உடலுறவு கூடாது. கடுகு போட்டுத் தாளித்து அந்த உணவுப் பொருளை உண்ணக்கூடாது.

இந்த இலைகளை நன்கு நிழலில் காய வைத்து 50 கிராம் அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்து நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் கஷாயமாக்கி வடிகட்டி இரண்டு முறை கொடுக்க நன்கு பேதியாகும். வயிற்றிலுள்ள கிருமிகள் வெளியாகும்.

இதன் வேரைச் சுத்தம் செய்து நன்கு காய வைத்து இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொண்டு அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து கொதிக்கின்ற வெந்நீர் ஒரு டம்ளர் எடுத்து அதிலிட்டு மூடி வைத்துவிட வேண்டும். அரைமணி நேரம் சென்ற பின்னர் வடிகட்டிக் குடித்து வந்தால் கடுமையான காய்ச்சல் குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...