ஆங்கலப்புத்தாண்டை கொண்டாட, ராகுல் வியட்நாம் சென்றது குறித்து பா.ஜ., விமர்சனம் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த டிச.26 அன்று காலமானார். அவரது மறைவுக்கு நாடே இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாட வியட்நாம் சென்றுள்ளார் என்று பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அமித் மாளவியா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ராகுல் உணர்வில்லாதவர், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ராகுல் மட்டும் புத்தாண்டை கொண்டாட வியட்நாம் சென்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சியினர் சீக்கியர்களை வெறுக்கிறார்கள். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவும் தர்பார் சாஹிப்பை இழிவுபடுத்தினார் என்பதை மறந்துவிடாதீர்கள்.
என்று பதிவிட்டிருந்தார்.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |