வழக்கை திசை திருப்ப முயற்சி செய்து வரும் திமுக அரசு – அண்ணாமலை

‘வழக்கை திசை திருப்ப தொடர்ந்து முயற்சி செய்து  வரும் தி.மு.க., அரசை கண்டிக்க, அனைத்து கட்சியினரும் முன்வர வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

‘ஒரு பெண் கல்லுாரிக்குள் நுழைந்தால், அது சமூக புரட்சி’ என்று நிகழ்ச்சி ஒன்றில், முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். கல்லுாரிக்குள் நுழைந்து, அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை, தங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல், ஒரு ஆட்சியை நடத்தி கொண்டிருக்கும்போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வரே?

ஒரு பெண் கல்லுாரிக்குள் நுழைந்தால், அது சமூக புரட்சி; அந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பைக்கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான், இந்த திராவிட ‘டிசாஸ்டர் மாடல்!’

அண்ணா பல்கலை மாணவி மீது பாலியல் தாக்குதல் குறித்து முன்னுக்கு பின் முரணமாக, காவல் துறையும், அமைச்சர்களும் பேசி வருகின்றனர். தி.மு.க., அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்து, தமிழக பா.ஜ., தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

த.வெ.க., தலைவர் விஜயும், தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, கவர்னரை சந்தித்து பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசை திருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் தி.மு.க., அரசை கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்து கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...