”ஒடிசாவில், என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் திருவிழா நடக்க உள்ளது. இது, மாநிலத்தின் கலாசார, பாரம்பரிய பெருமைகளை உலகெங்கும் பரப்பும்,” என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
ஒடிசாவில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் வெளிநாடுவாழ் இந்தியர் திருவிழா, இந்த முறை ஒடிசாவின் புவனேஸ்வரில் நடக்க உள்ளது. இந்த மூன்று நாள் திருவிழா இன்று துவங்குகிறது.
இதில் பங்கேற்க உள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், புரியில் உள்ள ஜெகன்னாதர் கோவில், கொனார்க்கில் உள்ள சூரியக் கோவில் ஆகியவற்றில் நேற்று தரிசனம் செய்தார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த திருவிழாவில் பங்கேற்க வருகை தரும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், புரி மற்றும் கொனார்க் கோவில்களை நிச்சயம் பார்க்க வேண்டும். இந்த திருவிழா, நம் நாட்டின் கலாசார, பாரம்பரிய பெருமைகளை உலகெங்கும் பரப்புவதற்கான ஒரு வாய்ப்பாக ஒடிசாவுக்கு அமைந்துள்ளது’ என, ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |