குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நம் நாட்டுக்கு வந்துள்ள இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார்.
நம் நாட்டின், 76வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது.
தலைநகர் டில்லியில் நடக்கும் விழாவில், தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்கிறார்.
இதற்காக மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக, அவர் நம் நாட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார். அவரது முதல் இந்திய பயணம் இது.
இந்நிலையில் டில்லியில் நேற்று, இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
‘குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்பது, இந்தியா – இந்தோனேஷியா இடையேயான நட்பின் பொருத்தமான கொண்டாட்டமாக இருக்கும்’ என, அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
இரு தரப்பு உறவுகள் குறித்து, பிரதமர் மோடியுடன், பிரபோவோ சுபியாண்டோ இன்று பேச்சு நடத்துகிறார்.
அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், எரிசக்தி, சுற்றுலா உள்ளிட்ட விவகாரங்களில், இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என, கூறப்படுகிறது.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |