மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின், துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்துாம், இரு நாட்கள் அரசுமுறை பயணமாக, நேற்று காலை டில்லிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை, மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி வரவேற்றார்.
தொடர்ந்து, பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட விவகாரங்களில், துபாயின் முக்கிய பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, இரு நாட்டு ராணுவத்தினரின் கூட்டு பயிற்சி, ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் இரு நாடுகளின் தொழில் துறையினர் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:
துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்துாமை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா – -ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான கூட்டணியை முன்னேற்றுவதில், துபாய் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்த சிறப்பு பயணம், நம் ஆழமான வேரூன்றிய நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எதிர்காலத்தில் இன்னும் வலுவான ஒத்துழைப்புக்கு அது வழிவகுக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.
முன்னதாக, துபாய் பட்டத்து இளவரசருடன், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தினர்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |