பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளை காப்பாற்றும் திமுக அரசு- அண்ணாமலை குற்றச்சாட்டு

பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தி, குற்றவாளிகளை காப்பாற்றுவதாக, மாநில அரசு மீது தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை அண்ணா நகரில், சிறுமி ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான போக்சோ வழக்கு தொடர்பாக, கடந்த 2024 செப்டம்பர் 7 அன்று, ஆங்கில நாளிதழ், சிறுமியின் பெற்றோர்களைக் காவல் ஆய்வாளர் தாக்கியதாகவும், அதிகாலை வரை, அவர்களை, காவல் நிலையத்தில் வைத்திருந்து துன்புறுத்தியதாகவும், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த 2023 ஆகஸ்ட் 30 அன்று பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கியக் குற்றவாளியான சதீஷ் என்ற நபர், ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்திக்கேற்ப, தாமதமாகவே செப்டம்பர் 12, 2024 அன்றுதான் கைது செய்யப்பட்டார்.

ஆனால், இந்த செய்திக்கு, மறுப்பு தெரிவித்த தி.மு.க., அரசு, கடந்த 13.09.2024 அன்று வெளியிட்ட செய்தியில், 14 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சிறுமியின் பெற்றோர்களைக் காவல் ஆய்வாளர் தாக்கியதாக வந்த செய்தி, விசாரணையில் பொய் என்று கண்டறியப்பட்டதாகவும் மறுப்பு வெளியிட்டது.

இந்த மறுப்பு வெளியீட்டில், 12.09.2024 அன்று கைது செய்யப்பட்ட சதீஷ் குறித்த விவரங்கள் எதுவுமில்லை. கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு விசாரணையும், உயர்நீதிமன்றத்தால் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பெயரில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில், காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை முறையாக நடைபெறாமல், கால தாமதமாக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில், அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் ராஜி என்பவரும், விசாரணைக்கு இடையூறாக இருந்த அ.தி.மு.க., நிர்வாகி ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முழுக்க, முழுக்க அலட்சியமாகவும், வழக்கு விசாரணையைத் திசை திருப்பும் போக்கிலும் செயல்பட்டு, ஆங்கில நாளிதழில் வந்த செய்தி பொய் என்று செய்தி வெளியிட்ட தி.மு.க., அரசு, தற்போது என்ன பதில் கூறப் போகிறது?

வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலேயே இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்த நாளிதழ் நிருபரை பாராட்டாவிடினும், அவரை மிரட்டும் விதமாக, தொந்தரவு செய்து வருவது என்ன நியாயம்? மேலும், சிறுமியின் பெற்றோர்களைக் இன்ஸ்பெக்டர் தாக்கவில்லை என்று விசாரணை நடத்தி தெரிவித்த அதிகாரி யார்? பொய் கூறிய அவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்த வழக்கிலும், கடந்த 11.11.2024 அன்று தி.மு.க., அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் குறித்த விவரங்களை வெளியிட்டு, பின்னர் அந்த செய்திக் குறிப்பை நீக்கியது. அண்ணா நகர் சிறுமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி என, தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தி, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்லத் தி.மு.க., அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன?

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் வழக்குகளில் குற்றவாளி ...

பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளை காப்பாற்றும் திமுக அரசு- அண்ணாமலை குற்றச்சாட்டு பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தி, குற்றவாளிகளை காப்பாற்றுவதாக, ...

இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன ...

இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக பா.ஜ., தலைவர் ...

கவர்னருக்கு எஹிராக ஆர்ப்பாட்ட ...

கவர்னருக்கு எஹிராக ஆர்ப்பாட்டம் நடத்தி பாலியல் விவகாரத்தை மறைக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம் ''அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை ...

பிரம்மபுத்திராவில் சீனா அணை கட ...

பிரம்மபுத்திராவில் சீனா அணை கட்ட முயற்சி: இந்தியா எச்சரிக்கையுடன் உள்ளது – ராஜ்நாத் சிங் திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் இந்தியாவுடனான எல்லைக்கு அருகில் ...

ஒடிசாவில் என்.ஆர்.ஐ திருவிழா – ...

ஒடிசாவில் என்.ஆர்.ஐ திருவிழா – ஜெய்சங்கர் பெருமிதம் ''ஒடிசாவில், என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் திருவிழா நடக்க ...

இண்டர்போல் உதவியை நாட பாரத்போல ...

இண்டர்போல் உதவியை நாட பாரத்போல் தளம் துவக்கி வைப்பு 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் உதவியை உடனடியாக ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...