மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்காதது ஏன்?- அண்ணாமலை கண்டனம்

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதியாமல், போலீசார் குற்றவாளிகளை எச்சரித்து அனுப்பியது தொடர்பாக தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து, மாணவியின் தந்தை, சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

மாணவியின் உறவினர் ஒருவர் முயற்சியால், தற்போது மீண்டும் வழக்குப் பதிவு செய்து, இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர். பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம், காவல்துறைக்கு யார் கொடுத்தது? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே அதல பாதாளத்தில் கிடக்கும்போது, பெண்கள், குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்?

நாட்டில் பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கெல்லாம், முழு விவரம் தெரியும் முன்னரே நான்கு பக்கத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின் ஏன் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்? தன் பொறுப்பில் இருக்கும் தமிழகக் காவல்துறையை அவர் என்ன ரீதியில் கையாண்டு கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. உடனடியாக, முதல்வர் ஸ்டாலின், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.