ஏ.பி.வி.பி., மாணவர்களை அவர்களின் அலுவலகத்திற்குள் நுழைந்து கைது செய்ததற்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், தி.மு.க., அரசின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தி.மு.க., அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பின் நிர்வாகிகளை, ஏ.பி.வி.பி. மாநில அலுவலகத்திற்குள் அத்துமீறி, இன்று அதிகாலை 4 மணி அளவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தி.மு.க., அரசின் இந்த அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பதால், அவரைக் காப்பாற்றும் நோக்கில், பாதிக்கப்பட்ட மாணவிக்காகப் போராடிய மாணவர்களைக் கைது செய்திருப்பது, திமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கு.
பாதிக்கப்பட்ட மாணவிக்காகப் போராடிய, ஏ.பி.வி.பி., மாணவர்கள் மீதான நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |