அவசர தேவையை கருத்தில்கொண்டு, இலங்கை தமிழர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தந்து , இலங்கை அரசு தீர்வு காணவேண்டும்” என்று , லோக்சபா எதிர் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார் .
ஆறு நாள் பயணத்தின் கடைசி நாளானநேற்று, சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; இலங்கை அதிபர்
ராஜபக்ஷே, இலங்கை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, தமிழர்களின் நிலைகுறித்து பேசினேன். பார்லிமென்ட் தேர்வுகமிட்டி தொடர்பான விஷயத்தில், இலங்கையில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டணி கட்சிக்கும், இலங்கை_அரசுக்கும் இடையேயான பேச்சு வார்த்தையில், முட்டு கட்டை நிலவுகிறது. இந்த முட்டுக்கட்டையை அகற்றி, சமரச தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று , இலங்கை அதிபரிடம் விளக்கினேன்.
இலங்கை அதிபருடனான சந்திப்பின்போது, இலங்கை போர் குறித்து, நல்லிணக்க ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளை செயல்படுத்துவது தொடர்பான பிரச்னைகளுக்குத் தான், அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. போரின் போது காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய விஷயம் குறித்தும் பேசினோம். அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தீர்வு காண வேண்டும் என்றும், இலங்கை அதிபரிடம் எடுத்துக் கூறினேன். இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், ராணுவத்தினரின் நடவடிக்கையை குறைப்பது குறித்தும் பேசப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வில், ராணுவத்தினர் தலையிட மாட்டார்கள் என, இலங்கை அதிபர் என்னிடம் உறுதி அளித்தார். இலங்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறு குடியமர்த்துவதற்காக நடக்கும் பணிகளை, ஒரு கிராமத்தில், நானே நேரடியாக பார்த்தேன். பணிகள், மிகவும் நல்ல முறையில் நடக்கின்றன. இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.