இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ குளிர்ச்சி தருவதாகவும், காய் பித்தம் தணிப்பதாகவும் பழம் குடல் வாயுவகற்றி குளிர்ச்சி உண்டாக்கி மலமிளக்குவதாகவும், பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து தாதுபலம் தருவதாகவும், விதை சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது.
புளியம் பூவை எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து கண்ணைச்சுற்றிப் பற்றுப் போட்டுவர, கண்சிவப்பு, கண்வலி குணமாகும்.
உப்பு, புளி சம அளவு எடுத்து அரைத்து உள்நாக்கில் தடவி வர உள்நாக்குச் சதை வளர்வது தடைபடும்.
ஒரு கைப்பிடியளவு புளியம் பூவை சட்டியிலிட்டு 500 மி.லி வீதம் தண்ணீர்விட்டு 250 மி.லியாக சுண்டக்காய்ச்சி வேளைக்கு 100 மி.லி வீதம் காலை, மாலை இரண்டு நாட்கள் கொடுத்துவர ஜலதோஷம் குணமாகும்.
புளியம் பூவை கைப்பிடி அளவு எடுத்து சட்டியிலிட்டு கால்லிட்டர் தண்ணீர்விட்டு 125 மி.லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மாலை கொடுத்துவர நீர்க்கடுப்பு நின்று குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.