‘உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமைகள் முக்கியம்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டில்லியில் ஸ்வமிதா திட்டத்தின் கீழ் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமை அடையாள அட்டைகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம், பயனாளிகளுக்கு பிரதமர் மோடி இன்று (ஜன.,18) வழங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 21ம் நூற்றாண்டில் பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, சுகாதார நெருக்கடி, தொற்றுநோய்கள் என எத்தனையோ சவால்கள் ஏற்பட்டன. ஆனால் உலகம் இன்னும் ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. இந்த சவால் சொத்துரிமை தொடர்பானது. பல ஆண்டுகளுக்கு முன்பு, ஐ.நா., சபை உலகின் பல நாடுகளில் உள்ள சொத்துகள் குறித்து ஆய்வு செய்தது.
உலகின் பல நாடுகளில் சொத்துக்களுக்கான முறையான சட்ட ஆவணங்கள் மக்களிடம் இல்லை என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. வறுமை குறைய வேண்டுமானால், மக்களுக்கு சொத்துரிமை மிகவும் அவசியம் என்று ஐ.நா., சபை தெளிவாகச் சொன்னது. இந்தியாவின் கிராமங்களில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருந்தும், அந்த அளவுக்கு மதிப்பு இல்லை. காரணம், மக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளுக்கு சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாததால், மதிப்புகள் குறித்து தெரிவதில்லை.
பல இடங்களில் அதிகாரம் படைத்தவர்கள் வீடுகளை ஆக்கிரமித்திருப்பார்கள். இன்று நமது நாட்டின் கிராம மக்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஸ்வமிதா திட்டத்தின் கீழ் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமை அடையாள அட்டைகளை வழங்கி உள்ளேன். 2.24 கோடி மக்களுக்கு இப்போது சொத்து உரிமை அடையாள அட்டை கிடைத்துள்ளன. அனைவரின் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையை நாங்கள் விரும்புகிறோம்.
ட்ரோன்களின் உதவியுடன், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வீடுகளின் நிலத்தை வரைபடமாக்க முடிவு செய்தோம். கிராமவாசிகள் தங்கள் சொத்துக்களின் ஆவணங்களைப் பெறுவார்கள். இன்று, இந்தத் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கும்போது, கிராமங்களுக்கும் ஏழைகளுக்கும் சேவை செய்ய முடிந்தது என்பதை அறிந்து திருப்தி அடைகிறேன். பயனாளிகளின் முகங்களில் காணப்படும் மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் தன்னம்பிக்கை உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நான் ஒரு பெரிய ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |