முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.
முருங்கை பூவை பாலில் வேகவைத்து- பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும் .
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி பொடியாக்க காலையில் கஷாயம்-செய்து அதனுடன் பனைவெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும் , நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும் , கண் பார்வை குறைபாடு நீங்கும்.
கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.
"ஞாபக மறதி நோய்" மிக கொடிய நோயாகும் .இந்த ஞாபக மறதி நோயைப் போக்கி நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி முருங்கை பூவிற்கு உண்டு.
முருங்கைப்பூவை நன்றாக அரைத்து பாலில்-கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்க்கண்டை சேர்த்து காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் நமது நினைவாற்றல் அதிகரிக்கும்.
முருங்கை பூவை நிழலில் உலரவைத்து பொடியாக்கி தினமும் கஷாயம் செய்து காலை மாலை என்று இரண்டு வேலையும் அருந்தி வந்தால் உடலில் இருக்கும் பித்தம் குறைந்து, உடலின் அசதி நீங்கி உடல் நிலை சீரடையும் .
முருங்கை பூவை நன்றாக அரைத்து பசும் பாலில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டை கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். நீர்த்துப்போன விந்து கெட்டியாகும் .
Tags;
நாக்கின் சுவையின்மையை நோய், கண்கள் குளிர்ச்சி அடைய, நரம்புகள் புத்துணர்ச்சி பெற, கண் பார்வை குறைபாடு, வெள்ளெழுத்து நோய், கண்ணில் உருவாகும் வெண்படலம், ஞாபக மறதி நோய், ஞாபக மறதி, நோயை, நினைவாற்றலை அதிகரிக்கும், நினைவாற்றல் அதிகரிக்கும். பித்தம் குறைய , உடல் அசதி நீங்க, விந்து கெட்டியாகும், தாம்பத்ய உறவு , தாம்பத்யம், விந்துவை , விந்தணு, விந்தணுக்கள்
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.