வெளியானது பாஜக மாவட்ட தலைவர் பட்டியல் – அண்ணாமலை வாழ்த்து

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கான பா.ஜ., தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்துக்களை கூறிக் கொண்டார்.

தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, 67 மாவட்டங்களாக செயல்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் உள்கட்சி தேர்தல் துவங்கியது. முதல்கட்டமாக, கிளை தலைவர்களும், மண்டல தலைவர்களும் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட தலைவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. ஒரு மாவட்டத்திற்கு தலா மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, கட்சி மேலிட தலைவர்களின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட தலைவர்களின் பட்டியல் மட்டும் இன்று வெளியாகியது.

சேலம் – சசிகுமார்

திருநெல்வேலி வடக்கு -முத்து பலவேசம்

தென்காசி – ஆனந்தன் அய்யாசாமி

சிவகங்கை – பாண்டிதுரை

நாமக்கல் மேற்கு – ராஜேஷ் குமார்

நாமக்கல் கிழக்கு – சரவணன்

விருதுநகர் கிழக்கு – பென்டகன் பாண்டுரங்கன்

திண்டுக்கல் கிழக்கு – முத்துராமலிங்கம்

திருப்பத்துார் – தண்டாயுதபாணி

கடலுார் மேற்கு – தமிழழகன்

கடலுார் கிழக்கு – கிருஷ்ணமூர்த்தி

நீலகிரி – தர்மன்

மயிலாடுதுறை – நாஞ்சில் பாலு

அரியலுார் – டாக்டர் பரமேஸ்வரி

காஞ்சிபுரம் – ஜெகதீசன்

செங்கல்பட்டு தெற்கு -டாக்டர் பிரவீன்குமார்

கன்னியாகுமரி மேற்கு -சுரேஷ்

கன்னியாகுமரி கிழக்கு -கோப்புகுமார்

திருவள்ளூர் கிழக்கு -சுந்தரம்

தேனி – ராஜபாண்டியன்

திருச்சி – ஒண்டிமுத்து

கோவை தெற்கு – சந்திரசேகர்

ஜன. 20ம் தேதி, மீதமுள்ள மாவட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட, பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து, மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதனிடையே, மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், ‘பாரதப் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தேசியத் தலைவர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் மோடி வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தைக் கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’,இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...