முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் எதற்கு பயன்படுகிறது ? அண்ணாமலை கேள்வி

முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் நீதியை நிலை நாட்டுவதற்கு பதில் உண்மையை மறைக்கவே பயன்படுத்தப்படுகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் விதிகள் மற்றும் சட்டங்களை மதிக்காமல் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்த அரசின் செயல்பாட்டின் உண்மையை உயர் போலீஸ் அதிகாரியால் கூட பேச முடியவில்லை. துணை ஆய்வாளர் நியமனத்தில் தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் சுட்டிக்காட்டினார். அதற்குப்பரிசாக அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தீ விபத்து நடந்தபோது அவர் இருந்திருந்தால் அவர் உயிரை இழந்திருக்கலாம். மிக மோசமான விஷயம் என்னவென்றால், இந்த விஷயத்தில் உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை போலீசார் புறக்கணித்தது ஏன்?

உயர் போலீஸ் அதிகாரிகள் மின்சாரம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க விரும்பினாலும், விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகள் வெட்ட வெளிச்சம் ஆக்கி உள்ளது.

தமிழகத்தில் ஊழல், முறைகேடுகள் மற்றும் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுகின்றனர்; போலீஸ் உயர் அதிகாரிகள் கூட மாநிலத்தில் பாதுகாப்பாக உணரவில்லை.

முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் நீதியை நிலை நாட்டுவதற்கு பதில் உண்மையை மறைக்க பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...