மாணவி பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம் சந்தேகம் – அண்ணாமலை

” அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது,” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர், இன்று மீடியாக்களிடம் பேசுகையில், முதலில் போலீசாரிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

ஆனால், நேற்று மீடியாக்களைச் சந்தித்த சென்னை போலீஸ் கமிஷனர் ஆணையர், பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே போலீசுக்கு புகார் வந்தது என்று கூறுகிறார். ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? உண்மையில் என்ன நடந்தது?

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளிக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்ததாகவும், சார் என்று கூறி, குற்றவாளி பேசியதாகவும் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தமிழக பா.ஜ., இதனை விடப் போவதில்லை. பிரச்னையை மடைமாற்றி, உண்மையை மறைத்துவிடலாம் என்ற நோக்கம் தி.மு.க., அரசுக்கு இருக்குமேயானால், தி.மு.க., அரசுக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகத் தான் கருத முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...