ரூ 4 ஆயிரம் கோடியில் ரோப் கார் திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கேதார்நாத் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, 4 ஆயிரம் கோடி ரூபாய் ரோப் கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், சோன்மார்க்- கேதார்நாத் பயண நேரம், வெறும் 36 நிமிடங்களாக குறையும்.

டில்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமர் மோடி அரசு எடுத்த முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஊடகங்களுக்கு விளக்கினார்.

அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

பர்வத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாக ,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கேதார்நாத் மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் ஆகிய இரு ரோப் கார் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு ரூ.6,800 கோடிக்கு மேல் செலவாகும்.

12.9 கி.மீ., நீளம் கொண்ட சோன்மார்க்- கேதார்நாத் ரோப்வே திட்டத்திற்கு ரூ.4,081 கோடிக்கும் மேல் செலவாகும். தற்போது இந்த தொலைவை கடக்க பக்தர்களுக்கு 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது. ரோப் வே அமைக்கப்பட்டால், பக்தர்கள் வெறும் 36 நிமிடங்களில் கேதார்நாத் சென்று விட முடியும்.

12.4 கி.மீ ஹேம்குண்ட் சாஹிப் ரோப்வே திட்டத்திற்கு ரூ.2,730 கோடி செலவாகும்.

இரண்டு திட்டங்களும் பர்வத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாக இருக்கும்.

இந்த திட்டம் ஆஸ்திரியா மற்றும் பிரான்சின் நிபுணர்களின் உதவியுடன் முடிக்கப்படும்.

இவ்வாறு அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...