பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் – பிரதமர் மோடி பாராட்டு

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மீண்டும் வருக! பூமி உங்களை மிஸ் செய்தது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் Crew9 விண்வெளி வீரர்கள் மீண்டும் ஒருமுறை விடாமுயற்சி என்ன என்பதைக் நிரூபித்து காட்டியுள்ளனர்.

தனது வாழ்க்கை முழுவதும் முன்மாதிரி பெண்மணியாக தன்னை வெளிப்படுத்தி உள்ளார் சுனிதா வில்லியம்ஸ். அவரின் மன உறுதி, தைரியம் மற்றும் எல்லையற்ற மனித மனப்பான்மையின் சோதனையாக இருந்தது.

விண்வெளி ஆய்வு என்பதும் மனித ஆற்றலின் வரம்புகளை தாண்டியது ஆகும். பாதுகாப்பாக பூமி திரும்ப அயராது உழைத்த அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன். அறியப்படாத பரந்த உலகில் அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு என்றென்றும் லட்சக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கும்.

விண்வெளி நிலையத்தில் இருந்து, பாதுகாப்பான வருகையை உறுதிசெய்ய அயராது உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...