ரூ 54,000 கோடி தளவாடங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நம் படைகளுக்கு நீர்மூழ்கி கப்பலுக்கான ஏவுகணைகள், முன்னெச்சரிக்கை செய்யும் விமான தொழில்நுட்பம், பீரங்கி வாகனங்களுக்கான இன்ஜின் உள்ளிட்ட, 54,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு, ராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

ராணுவ அமைச்சகம் இந்தாண்டை, சீர்திருத்தங்களுக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. இதன்படி, கொள்முதல்களில் ஒப்புதல் அளிப்பதற்காகும் காலத்தை இன்னும் குறைப்பதற்கு சில நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடந்த ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலம் வெகுவாக குறையும். இதற்கேற்ப நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு, விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வானில் இருந்து வரும் ஆபத்துகளை முன்னதாகவே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் போர் விமானங்களுக்கான தொழில்நுட்ப சாதனம், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து செலுத்தக் கூடிய ஏவுகணைகள், டி-90 பீரங்கி வாகனங்களுக்கான இன்ஜின்கள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்யவும், கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

இவை, 54,000 கோடி ரூபாயில் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...