ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி, ஸ்லோவாக்கியா பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது.
அரசு முறை பயணமாக போர்ச்சுக்கல் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, அடுத்ததாக ஸ்லோவாக்கியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அதிபர் பீட்டர் பெல்லேக்ரினியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்து பேசினார்.
அப்போது, இந்திய தத்துவ இலக்கியங்களின் ஸ்லோவாக்கியா மொழிபெயர்ப்பு அடங்கிய புத்தகங்களை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அவர் ஸ்லோவாக்கியா கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழக வளாகத்தை பார்வையிட்டார்.
பொது சேவையில் ஜனாதிபதியின் சிறந்த பணிகளைப் பாராட்டி அந்த பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ஸ்லோவாக்கியாவில் இந்திய சமூகத்தினரை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவிற்கும் ஸ்லோவாக்கியாவிற்கும் இடையே உறவுகள் வளர்ந்து வருகிறது.
யோகா, ஆயுர்வேதம் மற்றும் இந்திய உணவு வகைகள் போன்றவற்றால் இந்திய பாரம்பரியம் பிரபலப்படுத்தப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துகிறது. இது சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிப்பதை உறுதி செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் ஸ்லோவாக்கியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |