குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் பகுதியைச் சேர்ந்தவர்தான் சேஷாத்திரி இவரது வீட்டின் மொட்டை மாடியில் குளிரூட்டப்பட்ட அறையில் குங்குமப்பூ விவசாயம் செய்து லாபம் ஈட்டி வருகிறார்.

குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்குள் பல அடுக்குகளாக தட்டுகளை வைத்து அதில் குங்குமப்பூ விவசாயம் செய்து வருகிறார் சேஷாத்திரி. தண்ணீரும், மண்ணும் இல்லாமல் ஏரோபோனிக் முறையில் குங்குமப்பூ விளைவிக்கிறார் இளம் சிவில் இன்ஜினிய

குங்குமப்பூ விவசாயம் குறித்து சேஷாத்திரி கூறுகையில், “மாடர்ன் டெக்னாலஜியுடன் கூடிய விவசாயம் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதன் அடிப்படையில் காஷ்மீரில் மட்டும் வளரக்கூடிய குங்குமப்பூ-வை விவசாயம் செய்யும் ஆசை ஏற்பட்டது.

புனே சென்றபோது குங்குமப்பூ விவசாயம் செய்வது குறித்து அங்குள்ள விவசாயிகளிடம் கேட்டறிந்து தெரிந்து கொண்டேன். புனேயில் இருந்து தான் பூண்டு வடிவத்தில் தோற்றமளிக்கும் குங்குமப்பூ கிழங்குகளை வரவழைத்தேன்.

வீட்டின் மொட்டை மாடியில் குளிரூட்டப்பட்ட அறையில் காஷ்மீரில் உள்ளது போன்ற சீதோஷ்ண நிலையை ஏற்படுத்துவதற்காக விஞ்ஞான யுக்திகளை கையாண்டு வருகிறேன்.

ஈரப்பதத்தை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் இண்டெர்நெட் மூலம் இயங்கும் கருவிகளை பயன்படுத்தி வருகிறேன். ஈரப்பதம் மூலம் குங்குமப்பூ பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் வழங்கப்படுகின்றன.

225 சதுர அடியில் குளிரூட்டப்பட்ட அறை அமைத்துள்ளேன். வெளிச்சத்திற்காக விளக்குகள் மின்விளக்குகள் அமைத்துள்ளேன்.

செப்டம்பர் முதல் டிசம்பர் வரை குங்குமப்பூக்கள் விவசாயம் செய்யும் காலம் ஆகும். 4 மாதங்களில் வைலட் வண்ணத்தில் பூக்கள் மலரும். மலர்ந்த குங்கும பூக்களில் இருந்து அதன் சூலக இழைகளை கவனமாக சேகரித்து பிரத்யேக இயந்திரத்தில் அதை உலர்த்தி எடுக்கிறேன்.

ஒரு பூவில் மூன்று சூலக இழைகள் கிடைக்கும். தரத்தைப் பொறுத்து விலை மாறுபாடு உள்ளது. செயற்கை முறையில் சீதோஷ்ண நிலை ஏற்படுத்தி பராமரிப்பதன் மூலம் ஆண்டு முழுவதும் குங்குமப்பூ பயிரிட முடியுமா என்பதை குறித்து தற்போது பரிசோதித்து வருகிறேன்” என்றார்.

சேஷாத்திரி வெளியில் எங்காவது சென்றால் அவரது சகோதரி நித்யா குங்குமப்பூவை மேற்பார்வையிட்டு கவனித்துக் கொள்கிறார்.

ஒரு கிராம் குங்குமப்பூ-வுக்கு 300 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை தரத்துக்கு ஏற்ப விலை போகிறது. சுமார் 150 பூக்களில் இருந்து சூலக இழைகளை சேகரித்தால்தான் ஒருகிராம் குங்குமப்பூ உற்பத்தி செய்ய முடியும்.

நறுமண பொருள்களின் பட்டியலில் மிக உயர்ந்த விலைக்கு விற்கப்படுவது குங்குமப்பூ ஆகும். வயநாட்டில் குங்குமப்பூ விவசாயம் செய்யும் சேஷாத்திரி குறித்து மனதின் குரல் என்ற மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி பேசியுள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “வயநாட்டில் குங்குமப்பூ விளைவித்துருப்பது, மனம் இருந்தால் செயல்படுத்த வழி பிறக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்” என பாராட்டியுள்ளார் பிரதமர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...