பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்

ராகுல்காந்தி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்ட கோரிக்கை வைத்துள்ளார். 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்கள் மூடப்பட்டுள்ளன.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சிறப்பு அமர்வு கூட்டப்படவேண்டும் என்றும் கோரியுள்ள ராகுல்காந்தி, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த சிறப்பு அமர்வு கூட்டப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்கள் மூடப்பட்டுள்ளன. தூத்பத்ரி, தவ்சி மைதான், ராஜ்போரா, ராம்போரா உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்ட 48 சுற்றுலா இடங்களில் முக்கியமானவையாகும். மூடப்பட்டுள்ள சுற்றுலா மையங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புப்படை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...