பயங்கரவாதத்துக்கு முஸ்லீம் தலைவர்கள் கண்டனம்

”பஹல்காம் தாக்குதல் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. பயங்கரவாதிகளின் செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று ஹுரியத் மாநாட்டுத் தலைவர் மிர்வைஸ் பரூக் கூறினார்.

அவர் கூறியதாவது: காஷ்மீர் படுகொலைகள் எங்கள் இதயங்களை துளைத்துள்ளன. படுகொலைக்கு முன், அப்பாவி மக்களிடம், முதலில் அவர்களின் மத அடையாளங்கள் குறித்து கேட்டுள்ளனர். பின்னர், குடும்பத்தினர் முன்னிலையில் கொலை செய்யப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம். இது நம்பமுடியாத செயல். இதை ஒருவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தங்கள் சொந்தங்களை இழக்கும் வலியை காஷ்மீர் மக்கள் நன்கு புரிந்துள்ளனர். அவர்களை விட யார் இந்த துயரத்தை புரிந்துகொள்வார்கள்? கொல்லப்பட்டவர்களின் அன்புக்குரியவர்களின் வலியை எங்களை விட யார் அதிகம் உணர முடியும்? இந்த சம்பவத்தால் எங்கள் இதயங்களில் இரத்தம் கசிந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறின

டில்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அஹ்மது புகாரி, நேற்று தனது வெள்ளிக்கிழமை உரையின் போது பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டித்தார்.

அவர் கூறுகையில், ”அப்பாவிகளைக் கொல்வது பாவம். இஸ்லாம் மதத்தின் பெயரால் இதுபோன்ற செயல்களை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. சமீபத்திய வகுப்புவாத வன்முறைகள் கவலை அளிப்பதாக உள்ளன. எந்தவொரு பிரச்னைக்கும் பயங்கரவாதம் தீர்வாகாது,” என்றார்.

பஹல்காம் படுகொலை குறித்து பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சையது ஷாநவாஸ் உசேன் கூறியதாவது: மத்தியில் பா.ஜ., அரசு வந்த பின், காஷ்மீரில் அமைதி ஏற்பட்டு சுற்றுலா வளர்ச்சி பெற்று வந்தது. இதற்கு முடிவுகட்ட மிகப்பெரிய சதி நடக்கிறது. சுற்றுலா பயணியரை படுகொலை செய்வதற்கு முன், நீங்கள் எந்த மதம் என கேட்ட விதம், மிகப்பெரிய வெறுப்பு சம்பவமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. பயங்கரவாதிகளின் எண்ணத்தை இந்திய மக்களும், அரசும் முறியடிப்பார்கள்.

பயங்கரவாதத்துக்கும், பாகிஸ்தானுக்கும் எதிராக நமது நாடு ஒன்றுபட்டு நிற்கிறது. உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும். இதனால் அந்நாடு பயந்து நடுங்குகிறது. பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடியை இந்தியா தந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

யங்கரவாதத்தை ஒழிக்க சிறப்பு துவா

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, லக்னோ ஈத்கா இமாம் மவுலானா காலித் ரஷீத் பரங்கி மஹ்லி கூறியதாவது:

நமது நாட்டில் இருந்தும், உலகம் முழுவதிலும் இருந்தும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்ய அனைத்து மசூதிகள் மற்றும் இமாம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாவையொட்டி, பயங்கரவாதத்தை ஒழிக்க சிறப்பு துவா ஏற்பாடு செய்ய அனைத்து மசூதிகள் மற்றும் இமாம்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...