பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி

பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்தார். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடி இடம் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் பேசியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவை வழங்குவதாக புடின் உறுதியளித்தார்.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார். அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவையும் தெரிவித்தார்.

கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இரு நாட்டு தலைவர்களும் உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். வெற்றி தினத்தின் 80வது ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெறும் வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு அவரை அழைத்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...