இந்திய மண்ணில் இருந்துகொண்டு பாக்.,கிற்கு ஆதரவுதெரிவித்த தேசவிரோதிகள் 43 பேர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர் என அசாம் முதல்வர் ஹிமந்தபிஸ்வ சர்மா தெரிவித்தார்.
ஜம்மு – காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதல் குறித்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய ஷாஹிதுல் இஸ்லாம் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தேசவிரோத சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய மண்ணில் இருந்து கொண்டு பாக்.,கிற்கு ஆதரவாகபேசிய, ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாம் உள்பட இதுவரை தேசவிரோதிகள் 43 பேர் அசாமில் கைதுசெய்யப்பட்டனர் என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார். மேலும் அவர், எந்த துரோகியையும் விடுவிக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார்.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |