ஹனுமன் வழியில் தாக்குதல் – ராஜ்நாத் சிங்

ராமாயண ஹனுமன் கொள்கையின்படி, துல்லியம், முன்னெச்சரிக்கை, இரக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு துல்லிய தாக்குதல் நடத்தியதாக நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

‘ஆப்பரேஷன் சிந்துார்’ துல்லிய தாக்குதல் குறித்து பேசிய, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளை மட்டுமே குறி வைத்து, மிகச் சரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். டில்லியில் நேற்று நடந்த விழாவில் அவர் பேசியதாவது:

ராமாயண இதிகாசத்தில் அசோக வனத்தை அழித்தபோது, ஹனுமன் பின்பற்றிய அதே சித்தாந்தத்தை பின்பற்றி தாக்குதல் நடத்தினோம். அதாவது, துல்லியம், முன்னெச்சரிக்கை, இரக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நம் நாட்டில் அப்பாவிகளைக் கொன்றவர்களை மட்டுமே குறி வைத்து நாங்கள் கொன்றோம். தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமையை, மிகுந்த சிந்தனையுடனும் உறுதியுடனும் இந்தியா எடுத்தது.

எந்தவொரு பொதுமக்களும் பாதிக்கப்படக் கூடாது என்ற எங்களின் உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறோம். ‘ஆப்பரேஷன் சிந்துார்’ வாயிலாக பயங்கரவாத முகாம்களை அழித்த நம் படையினரின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்.

நம் படைகளுக்கு சுதந்திரம் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி; அவரது வழிகாட்டுதலில், நம் படையினர் இந்தியாவை பெருமைப்படுத்தியதோடு, புதிய வரலாறை படைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...