நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

 எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். மனதிற்கு நல்ல மகிழ்ச்சியுண்டாகும். நல்ல தேகபுஷ்டி உண்டாகும். நல்ல பலம் உண்டாகும். உடலில் நல்ல ஒளியுண்டாகும். வாலிபத் தன்மை என்றும் நிலைத்திருக்கும். கண்கள் சம்பந்தப்பட்ட நோய், செவி நோய், கபால அழல்நோய் காச நோய் மட்டுமன்றி உடல் புண்களும் குணமாகும்.

ஆண்களைப் பொறுத்தவரையில் சனியும் புதனும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்களைப் பொறுத்தவரையில் செவ்வாயும் வெள்ளியும் கட்டாயம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

அதிகாலையில் எண்ணெய் தேய்த்து சூரிய உதயத்திற்கு முன்னால் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் உடனே குளிக்க கூடாது. குறைந்தது அரைமணி நேரமாவது பொறுத்துதான் குளிக்க வேண்டும்.

நல்லெண்ணெய் அவ்விதமே உபயோகிக்கக் கூடாது. காய்ச்சி ஆற வைத்துதான் குளிக்க வேடும். அதிலும் வெந்நீரில்தான் குளிக்க வேணும். சோப் உபயோகிக்கக்கூடாது. சீயக்காய்த்தூள் அல்லது அரைப்பு தேய்த்துதான் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்க்கும்போது, எண்ணெயை இருதயத்தை நோக்கித் தேக்க வேண்டும். இவ்விதம் தேய்த்து வந்தால் தோல் நல்ல பளபளப்புடன் காணப்படும். உடற்சூடு கண்டிப்பாகத் தணியும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...