இன்று அமெரிக்கா செல்கிறார் ஜெய்சங்கர் ; குவாட் மாநாட்டில் பங்கேற்பு

குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அமெரிக்கா செல்கிறார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் அழைப்பை ஏற்று, அமைச்சர் ஜெய்சங்கர் இன்று 4 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். வாஷிங்டனில் நாளை (ஜூலை 2) நடக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான குவாட் மாநாட்டில் பங்கேற்கிறார்.

கூட்டத்தில் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கான புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். உலகளாவிய நிகழ்வுகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ள இருக்கின்றனர். மேலும், இந்தியாவில் நடைபெறவிருக்கும் குவாட் தலைவர்கள் மாநாட்டிற்கான முன் தயாரிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குவாட் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் மற்றும் அதனை தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்த கண்காட்சியை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைக்க உள்ளார். எல்லைத் தாண்டிய பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளவிலான எதிர்ப்பை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...