‘நம்பர் ஒன்’ முதல்வர் என்ற கனவுலகில் வாழும் ஸ்டாலின்:நயினார் நாகேந்திரன் விமர்சனம்

‘உலகிலேயே, ‘நம்பர் ஒன்’ முதல்வர் என்ற கனவுலகில், முதல்வர் ஸ்டாலின் வாழ்கிறார்’ என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில், 2026ம் ஆண்டு பொங்கலுக்கு வழங்க இருக்கும், இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணையில், கடந்த ஆண்டை விட, 76 லட்சம் சேலைகள், 48 லட்சம் வேட்டிகள் குறைக்கப்பட்டுள்ள செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது.

இதனால், 26,300 விசைத்தறிகளுக்கு மட்டுமே வேலை இருக்கும்; ஒரு லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள், வேலையிழக்கும், இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, நுால் கொள்முதலில் ஊழல், மானிய தொகையில் கமிஷன், வேட்டி, சேலை வழங்குவதில் முறைகேடு என, தி.மு.க., அரசின் நிர்வாக குளறுபடிகளால் நெசவாளர்கள் அல்லல்படுகின்றனர்.

இதுபோதாதென்று, ஒவ்வொரு ஆண்டும் இலவச வேட்டி, சேலை உற்பத்தியை குறைத்து வருவது ஏன்? ஆளும் அரசை எதிர்த்து, ஏழை மக்கள், என்ன செய்துவிட முடியும் என்ற இளக்காரமா?

உலகிலேயே, ‘நம்பர் ஒன்’ முதல்வர் என்ற கனவுலகில் வாழும் முதல்வர் ஸ்டாலின், வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும், நெசவாளர்களின் நலனில் அக்கறை செலுத்த தவறியதன் விளைவு என்ன என்பதை, வரும் சட்டசபை தேர்தலில் புரிந்து கொள்வார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...