அதிகரித்துவரும் சகிப்புத்தன்மையின்மை

சவூதி அரேபியாவின் தலைமை முப்தி (மதகுரு) இஸ்லாமிய நாடுகளில் உள்ள எல்லா சர்ச்சுகளையும் இடித்து விட வேண்டும் என்று அறை கூவல் விடுத்துள்ளார். ஆனால் இந்தியாவில் உள்ள “லிபெரல்கள்” மதச்சார்பின்மை வாதிகள் இது குறித்து எவ்வித விமர்சனத்தையும் சொல்லாமல் மௌனமாக உள்ளனர்.

சவூதி அரேபியாவின் தலைமை முப்தி வஹாபி இஸ்லாமின் மிக உயர்ந்த நபர் ஆவார். தங்களுடைய எல்லைகளில் உள்ள கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களை இடித்துத் தள்ளுமாறு அனைத்து  இஸ்லாமிய அரசுகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அறிவுப்புக்கு எவ்வித மறுப்பும் இது வரை தெரிவிக்கப்படவில்லை. எனவே முப்தியின் அறிவிப்பை நாம் ஏதோ மேம்போக்காக சொல்லப்பட்டது என்று சந்தேகிக்க இயலாமல் உள்ளது.

சிரியா, லெபனான், ஈராக் போன்ற நாடுகள் இன்று முஸ்லிம் நாடுகளாக உள்ளன. ஆனால் அந்த நாடுகளுக்கு இஸ்லாம் வருவதற்கு முன்னர் கிறிஸ்துவம்தான் முக்கிய மதமாக இருந்தது . இஸ்லாம் வந்த பிறகு இரு மதக்காரர்களும் ஒருவர் வழிபாட்டுத்  தலங்களை இன்னொருவர் இடிப்பத்தில் சில காலம் ஈடுபட்டனர். அதன் பிறகு இந்த இரு மத சமூகங்களை சார்ந்தவர்களுக்கு இடையே ஒரு உடன் பாடு எட்டப்பட்டது. இதன் விளைவாக ஒரு அளவுக்கு மத சகிப்புத்தன்மை உருவாகியது. இருந்தும் கூட, இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையோர் விளிம்பு நிலையில் தான் வாழ்க்கை நடத்தி வந்தனர். தற்போது கூட  சிறுபான்மையோர் இந்த இஸ்லாமிய நாடுகளில் வேட்டையாடப்படுவதற்கு எவ்வளவோ சான்றுகள் உள்ளன. பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும், இஸ்லாமை இழிவு படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் எராளமான கிறிஸ்துவர்களும், ஹிந்துக்களும் சிறையில் வாடுகின்றனர். பாகிஸ்தானில் இது சம்பந்தமாக மிக கொடுமையான கடுமையான ஒரு சட்டம் உள்ளது. அதில் ஒரு சிறிய திருத்தம் கொண்டு வருவதற்கு அங்கு முயற்சி நடந்தது. சர்வதேச அளவில் இந்த கொடூரமான சட்டம் குறித்து எழுந்த கடும் கண்டனங்களால் இந்த சிறிய சட்ட திருத்தம் கொண்டு வர முயன்றனர். ஆனால் இத்தகைய ஒரு சிறிய மாற்றத்தைக் கூட பாகிஸ்தானில் உள்ள வெறியர்கள் கடுமையாக எதிர்த்தனர். இந்த திருத்தத்தை ஆதரிப்போரை  கொன்றுவிடப் போவதாக தீவிரவாதிகள் அச்சுறுத்தினர். இதனால் பாகிஸ்தான் அரசாங்கம் அந்த சிறிய சட்ட திருத்தம் கொண்டு வரும் முயற்சியைக் கூடக்  கைவிட்டு விட்டது.

பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் ஆளுனராக இருந்தவர் சல்மான் தசீர். அவர் ஒரு பரந்த மனப்பான்மை கொண்டவர். அவருக்கு ஏற்பட்ட கதியை சிறிது நினைத்துப் பாருங்கள். இஸ்லாமை இழிவுபடுத்தும் சட்டத்தில் ஒரு சிறிய மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று அவர் பிரச்சாரம் செய்து வந்தார். அவரை பட்டப்பகலில் கொன்று குவித்து விட்டனர். அது மட்டுமல்ல, அவரைக் கொன்ற கொலைகாரனை, பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த கொலைகாரனுக்கு நிதி குவிந்தது. கொலை செய்யப்பட்ட  செல்வாக்கு பெற்று இருந்த பஞ்சாப் ஆளுனருக்கு நியாயம் கிடைக்க, கொலைகாரனைத்  தண்டிக்க எந்த வக்கீலும் வாதாட முன்வரவில்லை. இப்போது சல்மான் தசீரைக் கொன்ற கொலைகாரனுக்கு தண்டனை கொடுத்த நீதிபதிக்கு கூட கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.

சவூதி அரேபியாவின் தலைமை முப்தி சர்ச்சுகளையும் இதர முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களையும் இடித்துத்தள்ள அறைகூவல் விடுத்ததை இஸ்லாமிய நாடுகள் அமைதியாகக் கேட்டுக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பதை இந்தப்  பின்னணியில் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள முஸ்லிம் தலைவர்களும், மதசார்பின்மை வாதிகளும் அமைதியாக இருப்பதை எப்படி விளக்க இயலும்? இத்தனைக்கும் அவர்கள் இஸ்லாம் ஒரு அமைதியை நாடும் மார்க்கம் என்று தொடர்ந்து முழங்கி வருகின்றனர்.

பல்வேறு மதங்களும் சகிப்புத் தன்மையோடு இணக்கமாக வாழ்வது என்பது உலக வழக்கமாக உள்ளது. ஆனால் சில இஸ்லாமிய நாடுகளின் தற்போதைய சரித்திர பூர்வமான அனுபவங்கள் இதற்கு நேர் எதிர்மாறாக உள்ளன. ஈராக் நாட்டில் சன்னிபிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அங்கு ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையில் உள்ளனர். அங்கு சமீபத்தில் இந்த இரு பிரிவு முஸ்லிம்களுக்கு இடையில் சச்சரவுகள் வலுத்து பெரும் கலவரங்கள் ஏற்பட்டன. ஈராக் நாட்டின் துணை ஜனாதிபதி சிறுபான்மை சன்னி முஸ்லிம். அவரே கத்தார் நாட்டுக்கு ஓடிப் போய் அடைக்கலம் புக நேரிட்டது. இந்த நிலையிலும் ஈராக் மற்றும் கத்தார் நாட்டுக்கு இடையில் பல்வேறு பேதங்களை அமெரிக்கா நாடு சரிக்கட்டிய பிறகே அந்த துணை ஜனாதிபதியை பத்திரமாக காப்பாற்ற முடிந்தது.

அமெரிக்கர்கள் ஈராக் நாட்டை ஆக்ரமிப்பதற்கு முன்பு அந்த நாடு ஒரு சன்னி பிரிவு முஸ்லிம் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். சதாம் ஹுசைன் ஈராக் நாட்டை இரும்புக் கரம் கொண்டு ஆண்டு வந்தார். ஆனால் அவரை எதிர்த்து வந்த ஷியா பிரிவு முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக மரண தண்டனைக்கு உள்ளாக்கும் விஷயத்தில் சதாம் ஹுசைன் கூட தயக்கம்தான் காட்டினார். இதே மாதிரி சிரியா நாட்டிலும் சச்சரவுகள் தொடர்கின்றன. அந்த நாட்டின் பிரதமர் பஷர் அல் ஆசாத் என்பவர் அவர் அங்குள்ள வலுவான ஆனால் சிறுபான்மையாக இருக்கும் அலாவைத் சமூகத்தை சார்ந்தவர். இவர் சிரியா நாட்டின் சன்னி பிரிவு முஸ்லிம்களை நசுக்கிக் கொண்டு உள்ளார். இவை எல்லாம் இஸ்லாமின் இரு பிரிவுகளுக்கு இடையே  தீர்க்க இயலாத வேற்றுமைகள் இருப்பதை சாதி   விளக்கும் உதாரணங்கள் ஆகும். இம்மாதிரியே சவூதி அரேபியாவில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையில் உள்ளனர். அங்கு சிறுபான்மையில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எவ்வித சிவில் உரிமைகளும் கிடையாது.

ஈரான் நாட்டில் ஷியா மௌல்விகள்தான் நீதி சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர். அவர்களைப் பின் பற்றுபவர்கள் பிற பிரிவு மக்களை வாட்டி வதைத்து வருகின்றனர். நிலைமை என்னவென்றால் தங்களுடன் ஒத்துப் போகாத எல்லா பிரிவுகளையுமே அவர்கள் கொடுமைப்படுத்தி வருகின்றனர். ஈரான் நாட்டில் இஸ்லாம் வென்ற பிறகு அங்கு கோலோச்சி வந்த ஜோரஷ்ட்ரிய (பார்சிக்கள் ) மதம் அடித்து விரட்டப்பட்டுவிட்டது. ஈரானில் உள்ள பஹாய் பிரிவு மக்கள் பல நூற்றாண்டுகளாக கொடுமைப்படுத்தப் பட்டு வருகின்றனர்.

நம்முடைய நாட்டில் கடந்த 1000 வருடங்களுக்கும் மேலாக  முஸ்லிம்கள் ஆக்ரமிப்பு இருந்தது. இந்த சமயத்தில் ஆண்ட பல்வேறு இஸ்லாமிய அரசுகளும் சகிப்புத்தன்மை அற்ற போக்கைத்தான் கடைப்பிடித்து வந்தன. இது சம்பந்தமாக சரித்திர ஆசிரியர்கள் பல்வேறு சம்பவங்களை  நிகழ்வுகளை பதிவு செய்துள்ளனர். ஹிந்து ஆலயங்களை அழிப்பது, இடிப்பது அத்தகைய சகிப்புத் தன்மையற்ற போக்கிற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. அதே சமயம் இஸ்லாமை இன்று பின்பற்றுவோர் ,அவர்களுடைய முன்னோர்கள் இஸ்லாமின் பெயரால் என்ன செய்தார்கள் அல்லது என்ன செய்யத் தவறினார்கள் என்பதற்கு பொறுப்பாளிகளாக ஆக்கப்படக் கூடாது.

சவூதி அரேபியாவின் தலைமை முப்தி இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை இடித்துத்தள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளதற்கு நம்முடைய நாட்டில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் ஒருவர் கூட எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக அவர்கள் முழுஅமைதி காத்து வருகின்றனர். இதை “மத சகிப்புத்தன்மையற்ற” நிலையை ஆதரிப்பதாக விமர்சனம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. துரதிருஷ்டமாக மதசார்பின்மைக் கும்பலைச்  சேர்ந்த பல சரித்தர ஆசிரியர்களும் இஸ்லாம் மதத்தைப்  பின்பற்றுவோர் பலரும் இஸ்லாமிய ஆக்ரமிப்பாளர்கள் கடந்த காலங்களில் ஹிந்துக் கோவில்களை இடித்துத் தரைமட்டம் ஆக்கியதை, இடித்துத் தள்ளியதை நியாயப்படுத்துகின்றனர். மத சார்பற்ற சரித்திரப் பேராசிரியர்கள் அவ்வாறு ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டதை சாதாரணமாக அல்லது இடிப்பே நடக்காதது போல் வர்ணிக்கின்றனர். அவர்கள் பித்தலாட்டத்திலும் இஸ்லாமிய ஆக்ராமிப்பாளர்களின் மதசகிப்புத் தன்மையற்ற நிலைதான் பரந்துகிடக்கிறது.

இவ்வாறு பிற வழிபாட்டுத் தலங்களை இடித்துத் தள்ளுவதை தான் சார்ந்துள்ள இஸ்லாம் மதம் அனுமதிப்பதாக சவூதி அரேபியாவின் முப்தி “விளக்கம் அளித்துள்ளார்”. அது மட்டுமல்ல இஸ்லாமை பின் பற்றுவோர் அனைவரும் இதை கடை பிடித்தாக வேண்டும், இது ஒரு அடிப்படை தேவை என்றும் அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் மத சகிப்புத்தன்மை இஸ்லாமில் கிடையாது என்பதை அவர் பட்டவர்த்தனமாக தெளிவாக எவ்வித ஐயப்பாடும் இன்றி தெளிவுபடுத்தி உள்ளார்.

இஸ்லாம் உலகளாவிய ஒரு மதம். ஆனால் அதனை பின்பற்றுவோர் இவ்வாறு அழிவு செயல்களில் ஈடு படவேண்டும் என்று சவூதி அரேபியாவின் முப்தி கூறியுள்ளார். இத்தகைய அணுகு முறையில் இருந்து இஸ்லாமை தள்ளி வைக்க வேண்டும், அந்த முயற்சியை இஸ்லாமின் தலைவர்கள் செய்ய வேண்டும் என்றுதான் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடுவோர் ஆவலாக  எதிர் பார்க்கின்றனர். இன்றைய உலகில் பல்வேறு சமயங்கள் வாழ்ந்தாக வேண்டிய நிலைமை உள்ளது. எனவே அரசியல் தலைவர்களுக்கும் மதத்  தலைவர்களுக்கும் சகிப்புத்தன்மை மற்றும் மத நல்லிணக்கத்தை பேணிப் பாதுகாக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது. ஆனால் நாம் காண்பது என்ன? குறிப்பாக இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே பிணக்கை அதிகரிக்கும் முயற்சிகள் தீவிரமாக பலசமயங்களில்  வன்மையாக மேற் கொள்ளப்படுகின்றன. அவர்கள் அனைவரையும் ஒரே நல்லிணக்கக்  குடையின் கீழ் கொண்டு வருவதற்கு மாறாக அவர்களை பிளவுபடுத்தும் முயற்சிகள் இவ்வாறு தீவிரப்படுத்தப் படுகின்றன.

சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் சட்ட மன்ற தேர்தல் நடந்தன. காங்கிரஸ் கட்சி எப்போதுமே முஸ்லிம்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்த காலம் காலமாக முயன்று வருகிறது. இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் பிளவு மனப்பான்மையை ஊக்குவித்து அதனால் அரசியல் லாபம் காண காங்கிரஸ் கட்சி எப்போதும் முயன்று வந்துள்ளது. அவர்களை அரசியல் வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்த காங்கிரஸ் இந்த உத்திகளை கடைப்பிடித்து வருகிறது. ஆனால் இதெல்லாம் இனிமேல் நடக்காது என்பதை உத்திரப்பிரதேச மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கேவலமாகத் தோற்று புரிந்து கொண்டது. இருந்தும் கூட முஸ்லிம்களை வெறும் வாக்கு இயந்திரங்களாக மட்டுமே நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் எண்ணம் அதன் ரத்தத்திலேயே  ஊறிப்போய்விட்டது. .அதனாலதான் சமீபத்தில் டில்லியில் நடந்த நகராட்சி தேர்தல்களில் முஸ்லிம்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தில்லி மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் அகர்வால் கேட்டுக் கொண்டார். முஸ்லிம்களின் சமூகத்திற்கு தான்தான் ஏக போகக்  காவலன் என்ற தோற்றத்தை தக்க  வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி முயல்கிறது. இதற்கு மதசார்பின்மைவாதிகள் என்று தங்களை வர்ணித்துக் கொள்வோரின் உதவியும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கிறது.

சச்சார் கமிட்டி அறிக்கை இந்த உண்மைக்கு சிறந்த எடுத்தக்காட்டாக, சான்றாக விளங்குகிறது. சமீபத்தில் உத்திரப்ரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்தன. காங்கிரஸ் கட்சி எப்போதுமே முஸ்லிம்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்த காலம் காலமாக முயன்று வருகிறது. இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் பிளவு மனப்பான்மையை ஊக்குவித்து அதனால் அரசியல் லாபம் காண காங்கிரஸ் கட்சி எப்போதும் முயன்று வந்துள்ளது. அவர்களை அரசியல் வாக்கு வங்கிகளாக பயன்படுத்த காங்கிரஸ் இந்த உத்திகளை கடைப்பிடித்து வருகிறது. ஆனால் இதெல்லாம் இனிமேல் நடக்காது என்பதை உத்திரப்ரதேச மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கேவலமாகத் தோற்று புரிந்து கொண்டது. இருந்தும்கூட முஸ்லிம்களை வெறும் வாக்கு இயந்திரங்களாக மட்டுமே நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் எண்ணம் அதன் ரத்தத்திலேயே  ஊறியுள்ளது. அதனாலதான் சமீபத்தில் டில்லியில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் முஸ்லிம்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தில்லி  பிரதேஷ் காங்கிரஸ் கட்சித் தலைவர் அகர்வால் கேட்டுக் கொண்டார். முஸ்லிம்களின் சமூகத்திற்கு தாங்கள்தான் ஏகபோகக் காவலன் என்ற தோற்றத்தை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி முயல்கிறது. இதற்கு மதசார்பின்மைவாதிகள் என்று தங்களை வர்ணித்துக் கொள்வோரின் உதவியும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கிறது. சச்சார் கமிட்டி அறிக்கை இந்த உண்மைக்கு சிறந்த எடுத்தக்காட்டாக, சான்றாக விளங்குகிறது.

தனது இஸ்லாம் மதத்தின் கட்டளை என்ற நம்பிக்கையில் சவூதி அரேபியாவின் தலைமை முப்தி சர்சுகளை இடித்துத் தள்ளவேண்டும் என்று நோக்கம் கொண்டு இருக்கலாம். நம் நாட்டில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் பல்வேறு சமயங்களைப் பின்பற்றுவோர், எந்த நம்பிக்கையுமே இல்லாதவர்கள், பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் என பல அம்சங்களைக் கொண்ட “தேசிய சித்தாந்தம்” உள்ளது. இத்தகைய தேசிய சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் நம்முடைய நாட்டின் கதி மோட்சமே அடங்கியுள்ளது. ஆனால் சவூதி அரேபியாவின் தலைமை முப்தியைப் போன்றே காங்கிரஸ் கட்சியும் இந்த தேசிய சித்தாந்தத்தை  இடித்துத் தள்ள முழு முயற்சிகள் செய்து வருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்தியஅரசின் திட்டத்துக்கு, கனிமொழி ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.