இந்தியா மன்னிப்பு கேட்காது.!

தொலைக்காட்சி விவாதம் – பா.ஜ.க உறுப்பினர் பேச்சு.!
இந்தியா மன்னிப்பு கேட்காது.!
இந்திய மக்கள் அதற்கு ஒருபோதும் சம்மதிக்கவும் மாட்டார்கள்.!

இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடந்த விவாதத்தில் பங்கு பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் நுகர்பா சர்மா மற்றும் ஜிண்டால் ஆகியோர் இஸ்லாமிய இறை தூதுவர் பற்றி ஆட்சேபத்திற்குரிய கருத்து தெரிவித்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். எனினும் அரபு நாடுகளான கத்தார், சவுதி அரேபியா, துபாய், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கண்டனம் எழுப்பப்படுவதுடன் இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுவதாகத் தெரிகிறது.

இந்திய நாடு 140 கோடி மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு. அதில் பல அரசியல் கட்சிகள் உண்டு; அவற்றில் ஒன்றான பாரதிய ஜனதா கட்சி தற்போது ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் உறுப்பினர்கள் இருவர் இன்னொரு மதப் பிரிவினர் மனம் வருந்தும்படி கருத்து தெரிவித்தார்கள் என்பதற்காக அவர்கள் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். எனினும் அதில் திருப்தி அடையாமல் சில நாடுகள் இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் அழுத்தத்திற்குச் செவி சாய்த்து இந்திய அரசு மன்னிப்பு கேட்டால் 140 கோடி மக்களும் மன்னிப்பு கேட்டதாக அர்த்தம். அது போன்ற ஒரு நடவடிக்கையை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்; இந்திய அரசும் அதற்குச் செவி சாய்க்கக் கூடாது. இந்தியா என்றால் எப்படி பாஜகவையோ அல்லது வேறு எந்த ஒரு கட்சியையோ அடையாளப்படுத்துவது ஆகாதோ, அதே போன்று தான், பாஜக கட்சி என்றால் அதுவே இந்திய தேசம் என்றும் ஆகிவிடாது. எனவே அரேபிய நாடுகள் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்னும் சிறிதும் பொருத்தமில்லாத கோரிக்கையை வலியுறுத்தக் கூடாது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக வரும் செய்திகள் இந்திய மக்களை பெரும் கவலைக்கு உட்படுத்துகின்றன. வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்திய மக்களை வேலையை விட்டு நீக்கிட அச்சுறுத்துவதாகவும், இந்தியப் பொருட்கள் அந்நாடுகளில் புறக்கணிக்கப்படுவதாகவும் வரும் செய்திகள் எந்நாட்டவர்க்கும் நல்லதல்ல.

ஆயிரம் ஆண்டுகள் இந்திய தேசமும், இந்திய மக்களும் ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் முகலாயர்களின் படையெடுப்பால் இழந்தவைகள் ஏராளம். அவற்றைச் சொல்லிமாளாது. அப்படையெடுப்புக்களால் இந்திய வழிபாட்டுத் தலங்களுக்கும், பண்பாட்டிற்கும் மீட்க முடியாத சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றிற்கெல்லாம் யார் இதுவரை மன்னிப்பு கேட்டார்கள். யார் மன்னிப்பு கேட்பார்கள்?

2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துர்கா பூஜை பண்டிகையின் போது பங்களா தேசத்தில் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களும், உடைமைகளும் அழித்தொழிக்கப்பட்டன; 21 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இந்துக்கள் தினம் தினம் சித்திரவதை செய்யப்படுகின்றனர். இந்தியாவின் அங்கமாக உள்ள காஷ்மீரில் கூட இந்துக்கள் தினமும் கொல்லப்படுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் இந்து வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் வளைகுடா நாடுகளிலிருந்து ஒரு கண்டனம் கூட எழவில்லையே? இந்தியா மற்றும் இந்துக்களிடம் இதுவரை எவரும் மன்னிப்பு கேட்கவில்லையே?

ஆனால் இப்பொழுது ஒரு தேசிய கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் ஒரு மதம் குறித்து பேசியதற்காக 140 கோடி இந்திய மக்களையும் மன்னிப்பு கேட்கச் சொல்வது உள்நோக்கம் கொண்டது. மேலும் அவை அரேபிய வளைகுடா நாடுகளில் உள்ள இந்துக்களுக்குக் கொடுக்கப்படும் அச்சுறுத்தல்களாகவே இதை கருதப்பட வேண்டியுள்ளது. உலகளவில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் இது போன்ற எந்தவித நடவடிக்கைகளும் பொது அமைதிக்கு உதவாது. மேலும் இந்திய தேசத்தில் வசித்துக் கொண்டே இந்த பிரச்சினையை மையப்படுத்தி இந்தியத் தேசத்திற்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீதும் உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, இந்த பிரச்சனையை அரபு நாடுகள் இதற்குமேல் வளர்த்துக் கொண்டு போகாமல் பாஜக எடுத்த நடவடிக்கையில் திருப்தி அடைந்து பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

ஒரு கட்சியின் இரு உறுப்பினர்கள் பிரச்சினையை எவரும் இந்திய தேச பிரச்சினையாக்கக் கூடாது.!
இந்தியா ஒருபோதும் மன்னிப்பு கேட்காது.!
கேட்க வேண்டிய எவ்வித அவசியமும் கிடையாது.!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD., Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...