வெறுப்பு அரசியலை துாண்டும் ராகுல்; மன்னிப்பு கேட்க அமித் ஷா வலியுறுத்தல்

பீஹாரில், ‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மறைந்த அவரது தாயார் பற்றி அவதுாறாக பேசப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”வெறுப்பு அரசியலை துண்டும் ராகுல், மன்னிப்பு கேட்க வேண்டும்,” என, வலியுறுத்தி உள்ளார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போதே தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை ‘இண்டி’ கூட்டணியின் அங்கமாக போட்டியிடுகின்றன.

காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர், ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ என்ற பெயரில் பீஹார் முழுதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தர்பங்கா மாவட்டத்தில், இண்டி கூட்டணியின் வாக்காளர் உரிமை யாத்திரை சமீபத்தில் நடந்தது.

அதில் பேசிய காங்., நிர்வாகி ஒருவர், பிரதமர் மோடி மற்றும் மறைந்த அவரது தாயார் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசினார். மேடையில், ராகுல், பிரியங்கா, தேஜஸ்வி ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், அக்கட்சி மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது: பீஹாரில், இண்டி கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் மறைந்த அவரது தாயார் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் காங்கிரசார் பேசி உள்ளனர்.

இதை வன்மை யாகக் கண்டிக்கிறேன். நாட்டில் வெறுப்பு அரசியலை காங்., தலைவர் ராகுல் துவங்கி உள்ளார். இது, நம் பொது வாழ்க்கையை சீரழிக்கும். அவரது எதிர்மறை அரசியல் நாட்டை மேல்நோக்கி கொண்டு செல்லாது. இது போன்று இழிவாக பேசுவது காங்., தலைவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

சோனியா, ராகுல், மணி சங்கர் அய்யர், திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ், ரேணுகா சவுத்ரி போன்ற காங்., தலைவர்கள், பிரதமர் மோடியை பற்றி பலமுறை அவதுாறாக பேசி உள்ளனர். இதனால் அவர்களுக்கு கிடைத்தது என்ன?

இப்படி பேசினால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று விடுவரா? இப்படி கீழ்த்தரமாக பேசி, பல முறை மக்களிடம் காங்., தலைவர்கள் வாங்கிக் கட்டி கொண்டனர். இருந்தும், திருந்தவில்லை. பிரதமர் மோடியை எவ்வளவு அவதுாறு செய்கின்றனரோ, அந்தளவுக்கு தாமரை மலர்ந்து கொண்டே தான் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...