17-ஜூன் 2012 ஒட்டுமொத்த ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தையும் அதிரவைத்த நாள் … ஆம், வீர வாஞ்சிநாதன் ஆங்கிலேயே கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக்கொன்று தானும் மரணத்தை தழுவிய தினம் .
ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் கலெக்டர் என்பவர் எல்லையற்ற அதிகாரத்தை கொண்டவர் எனலாம். அவருடைய அதிகாரவரம்பு
இன்றைய கால கட்டத்தை போன்று அல்லாமல் பல மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகவே இருந்தது.
ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் நாளுக்கு நாள் கொடூரங்கள் அதிகரித்தன. அட்டூழியங்கள் பெருகியது. கொடுமைகள் அதிகரித்தன. பொறுத்ததுபோதும் என ஒரு இளைஞர் பட்டாளமே ஆங்கிலேயனுக்கு சரியான பதிலடி கொடுக்க தயாராகி அதற்க்கான களப்பணியிலும் இறங்கியது.
செங்கோட்டை,குற்றாலம், தென்மலை, ஐந்தருவி என பல இடங்களிலும் வன பகுதிக்குள் ரகசிய கூட்டத்தை போட்டனர். ரகசியமாக பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் ஹிட்லர் போல் வலம் வந்த அப்போதைய ஆட்சி தலைவரான வில்லியம் ஆஷ்துரையின் செயல்கள் மிகவும் எல்லை மீறி வருவதை உணர்ந்த அந்த இளைஞர்கள் பட்டாளம் ஆஷ்துரையை தீர்த்துகட்ட களம் தேடியது. கண்காணிப்பை தீவிரபடுத்தியது நாட்கள் நகர்ந்தன.
ஆஷ்துரை நெல்லையிலிருந்து ரயில் மூலமாக மணியாச்சி வழியாக தனது மனைவியுடன் கொடைக்கானலில் படிக்கும் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக சென்றுகொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததை தொடர்ந்து மகிழ்ச்சி கொண்டனர். 12 இளைஞர்கள் தயாரானார்கள். இதில் யார் ஆஷ்துரையை கொள்வது என போட்டி ஏற்ப்பட்டது , யார் ஆஷைக்கொல்வது என சீட்டுப்போட்டு பெயரை தேர்ந்தெடுக்கலாம் என முடிவுசெயயபட்டது , அதில் வாஞ்சி பெயர் வந்தது, பின் தான் தெரிந்தது எல்லாச்சீட்டிலும் வாஞ்சிபெயரை அவரே தந்திரமாக எழுதிக்குலுக்கியது.
பிறகு தலா இரண்டு பேர் வீதம் ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு பணிகளை தேர்ந்தெடுத்தது . 1911 ஜூன் மாதம் 17ம் தேதி மணியாச்சி ரயில்நிலையத்தில் துப்பாக்கியோடு வீர வாஞ்சிநாதனும், அவருக்கு உதவியாக சாவடி அருணாசலபிள்ளையும் காத்திருந்தனர்.
ரயில் மணியாச்சி ரயில்நிலையத்தை வந்தடைந்தது வாஞ்சி நாதன் சாவடி அருணாசலம் பிள்ளை யிடம், ஆஷ்துரை பயணம்செய்யும் முதல்வகுப்பு பெட்டிக்கு அடுத்த இரண்டாவது வகுப்புபெட்டிக்கு அருகே நின்றுகொண்டு பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிகைகளை கவனித்து கொள்ளுங்கள். நான் முதல்வகுப்பு பெட்டி அருகேசென்று ஆஷ்துரையை சுட்டு விட்டு தப்பி விடுவேன்.நான் துப்பாக்கியால் சுடும்சத்தம் கேட்டதும் நீங்கள் தப்பி விடுங்கள் என கூறி விட்டு வாஞ்சி நாதன் யாரும் சந்தேகப்படாதவாறு முதல்வகுப்பு பெட்டி அருகேசென்று ஆஷ் துரையை சந்தித்து குட்மார்னிங் என சொன்னார்.
இதைபார்த்த ஆஷ் துரை வெறுப்புடன் பதில் குட்மார்னிங் சொல்லி விட்டு இங்கிருந்து போய் விடுமாறு சைகைகாட்டினார். உடனே வாஞ்சிநாதன் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கண்இமைக்கும் நேரத்தில் ஆஷ்து ரையை நோக்கி சுட்டார்.துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் பீறிட ஆஷ்துரை கீழேசாய்ந்தார். துப்பாக்கி சுடும் சத்தம்கேட்டதும் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணமசெய்து கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வாஞ்சி நாதனை பிடிப்பதற்கு அவரது அருகே சென்றனர்.
அப்போது வாஞ்சி நாதன் துப்பாக்கியை கையில் ஏந்தியபடி, எனக்கு எதிரி ஆஷ்துரைதான் அவரை சுட்டு விட்டேன். எனக்கு நீங்கள் எதிரியல்ல கிட்டேவந்தால் உங்களையும் சுட்டு விடுவேன் என கூறியபடி கையில் துப்பாக்கியுடன் தலைநிமிர்ந்து வீரநடைபோட்டு சென்றார் விவேகம்கொண்ட வீர இளைஞன் வீரவாஞ்சி அதே ரயில்பெட்டியின் கழிவறையில் புகுந்து சரியாக காலை 10.50க்கு தன்னைதானே சுட்டு களச் சாவு அடைந்தார்.
நெல்லைகலெக்டர் "ஆஷ்துரை சுட்டுகொல்லப்பட்ட தகவல்" போதிய தகவல் தொடர்பு வசதி இல்லாத காலத்திலேயே தேசமெங்கும் பரவியது. ஆங்கிலேயனுக்கு அன்று_முதல் மரணபீதி தொற்றிகொண்டது. தமிழனை கண்டாலே ஒவ் வொருவனுக்கும் வீரவாஞ்சி நாதன் தெரிந்தான்.
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.