இந்தியாவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மைய

விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூகுள் அமைக்கஉள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம் குறித்து அதன் தலைமைச்செயல் அதிகாரி சுந்தர்பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கினார்.

அமெரிக்காவுக்கு வெளியே உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மையத்தை (Google AI Hub) கூகுள்நிறுவனம் அமைக்க உள்ளது. இந்தியா வந்துள்ள கூகுள் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து இந்ததிட்டம் குறித்து விவரித்தார்.

பின்னர் இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “விசாகப்பட்டினத்தில் முதன் முதலாக அமைக்கப்படும் கூகுள் ஏஐ மையம் குறித்த எங்கள் திட்டங்களை, பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒருமைல்கல் வளர்ச்சி.

இந்த மையம் ஜிகாவாட் அளவிலான கணினிதிறன், ஒருபுதிய சர்வதேச நீர்மூழ்கி நுழைவுவாயில், பெரிய அளவிலான எரிசக்தி உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றம் பயனர்களுக்கு எங்கள் தொழில்முறை முன்னணி தொழில் நுட்பத்தைக் கொண்டு செல்லும். செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை துரதப் படுத்துவோம். மேலும், நாடு முழுவதும் வளர்ச்சிக்கான உந்துதலை அளிப்போம்” என தெரிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை உடனான சந்திப்புகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆந்திரப்பிரதேசத்தின் துடிப்பான நகரமான விசாகப்பட்டினத்தில் கூகுள் செயற்கை நுண்ணறிவு மையத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. ஜிகாவாட் அளவிலான தரவுமைய உள்கட்டமைப்பை உள்ளடக்கிய இந்த பன்முக முதலீடு, வளர்ச்சி அடைந்தபாரதம் எனும் எங்களின் தொலைநோக்குத் திட்டத்தோடு ஒத்துப்போகிறது.

தொழில் நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதில் இது ஒரு மிகப் பெரிய சக்தியாக இருக்கும். இது அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவை உறுதிசெய்யும். நமது குடிமக்களுக்கு அதிநவீன கருவிகளை வழங்கும். நமது டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும். மேலும், உலகளாவிய தொழில்நுட்ப தலைவர் என்ற இந்தியாவின் இடத்தை பாதுகாக்கும்” என தெரிவித்துள்ளார்.

கூகுள் ஏஐ மையம் அமைப்பதற்கானப் பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவடையும் என்றும், இது உலகளாவிய கூகுள் நெட்வொர்க்குடன் இணைக்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கூகுள்கிளவுடின் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், “கூகுள் இந்தியாவில் நீண்ட காலமாக உள்ளது. இங்கு இது எங்களுக்கு 21வது ஆண்டு. ஐந்து ஆண்டுகளில் எங்களுக்காக 14,000 பேர் வேலைசெய்ய உள்ளார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் எங்கள் கிளவுட் தீர்வுகளை நாங்கள் தொடங்கினோம். புதுடெல்லி மற்றும் மும்பையில் எங்கள் சாதனங்களை நாங்கள் உற்பத்திசெய்கிறோம்.” எனத் தெரிவித்தார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...