பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

டெல்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சிமாநாடு கடந்த 16-ம் தேதி தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, இன்று (பிப்.18) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் கூகுள் உயர் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த உச்சி மாநாடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை நமது நாட்டின் சேவை மற்றும் ஏற்றுமதிக்கு முதுகெலும்பாகவும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாகவும் இருந்து வருகிறது. இந்த துறைக்கு செயற்கை நுண்ணறிவு ஒரு மகத்தான சவாலையும் வாய்ப்பையும் முன்வைக்கிறது.

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அவுட்சோர்சிங் அலைகளால் இந்தியாவின் ஐடி துறை 2030-ம் ஆண்டுக்குள் 400 பில்லியன் டாலர்களை எட்டும் என்று ஏஐ சந்தை கணிப்புகள் தெரிவிக்கின்றன’’ என தெரிவித்துள்ளார்.

உலகளாவிய தெற்கில் நடத்தப்படும் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு தற்போது புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. ‘அனைவருக்கும் நலன்; அனைவருக்கும் மகிழ்ச்சி’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப மனித குலத்துக்கான செயற்கை நுண்ணறிவை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த உச்சி மாநாடு கருப்பொருளாகக் கொண்டுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் 110க்கும் மேற்பட்ட நாடுகள், 30 சர்வதேச நிறுவனங்கள், 45 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...