கோவாவில் 77 அடி உயர ராமர் சிலையை திறந்த பிரதமர் மோடி

கோவாவில் 77 அடி உயரமுள்ள ராமரின் வெண்கலசிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

தெற்கு கோவாவில் உள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடத்தின் 550-வது ஆண்டினைக் கொண்டாடும் சார்தா பஞ்சாஷ்டமனோத்சவ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அங்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட 77 அடி உயர ராமரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். ஜீவோட்டம் மடம் உருவாக்கியுள்ள ராமாயண நிகழ்வுகளை சித்தரிக்கும் பூங்கா தோட்டத்தையும் அவர் திறந்துவைத்தார்.

சிறப்பு அஞ்சல்தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று இந்தியா ஒருகலாச்சார மறுமலர்ச்சியை அனுபவித்து வருகிறது. அயோத்தியில் ராமர்கோயில் மறுசீரமைப்பு, காசி விஸ்வநாதர் கோயில் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல், உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வர் கோயில் விரிவாக்கம் ஆகியவை நாட்டின் மீண்டும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தின் தீவிர மறுமலர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.

பல நூற்றாண்டுகளாக ஏராளமான சவால்களை எதிர்கொண்ட போதிலும் கோவா, அதன் பாரம்பரியத்தை பாதுகாத்து படிப்படியாக வலுப்படுத்தி உள்ளது. கோவாவில் கோயில்கள், மரபுகள், மொழி என அனைத்தும் அச்சுறுத்தலுக்குள்ளான காலங்கள் இருந்தன. ஆனால் இந்த அழுத்தங்கள், சமூகத்தின் உறுதியை ஆழப்படுத்தி அதன் கலாச்சார அடையாளத்தை வலுப்பதின. ஒவ்வொரு கலாச்சார மாற்றத்திற்குப்பிறகும் கோவா அதன் அசல் வடிவத்தைப் பாதுகாத்து வருகிறது. இது கோவாவின் தனித்துவமான பண்பு.

ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடம் ஐந்து நூற்றாண்டு களுக்கும் மேலாக ஏராளமான சவால்களை எதிர்கொண்டு தப்பிப்பிழைத்து, தொடர்ச்சியின் அடையாளமாக நிற்கிறது. காலங்கள்மாறின, நாட்டிலும் சமூகத்திலும் பலமாற்றங்கள் நிகழ்ந்தன. மாறிவரும் சவால்களுக்கு மத்தியில் மடம் அதன் திசையை இழக்கவில்லை. மாறாக, அது மக்களுக்கு வழிகாட்டும் மையமாக உருவெடுத்து நிற்கிறது. இதுவே அதன் மிகப்பெரிய அடையாளம்” என தெரிவித்தார்.

த்வைத தத்துவத்தை பின்பற்றும் ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடம் என்பது முதலாவது கௌட்சரஸ்வத் பிராமண வைஷ்ணவ மடமாகும். இது குஷாவதி ஆற்றங்கரையில் உள்ள பர்த்தகலியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...