மாறாதது இனி மாறும் – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அம்ருத்பாரத் ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார். பின்னர் திருவனந்தபுரம் புத்தரிகண்ட மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றிய வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் 2026 சட்டசபைத் தேர்தல் பிரசாரம் தொடக்கவிழா ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “கட்சிக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத்தந்த திருவனந்தபுரத்தை நாட்டின் முன்மாதிரி நகரமாக உருவாக்குவோம்.

அதற்காக மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். மக்கள் பா.ஜ.க-வை நம்பத் தொடங்கியுள்ளதற்கு தலைநகரில் கிடைத்த வெற்றியேசாட்சி. மாறாதது இனி மாறும். மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் ஏற்பட்ட மாற்றம் கேரளாவிலும் ஏற்படும். பி.எம் ஸ்ரீ திட்டத்தை நிராகரித்ததன் மூலம் ஏழைக்குழந்தைகள் சிறந்த பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளது இடதுசாரி அரசு.

கேரளாவில் சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளின் வழிமுறைகள் ஒன்றேதான். ஊழலும், வகுப்புவாதமும் 100 சதவிகிதம் உள்ளன. வெளிப்படைத் தன்மையும், வளர்ச்சியும் பூஜ்ஜியமாக உள்ளன.

காங்கிரஸ் பழைய காங்கிரஸ் அல்ல. அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) என்பதுமுஸ்லிம் மாவோயிஸ்ட் காங்கிரஸ் (எம்.எம்.சி) என மாறிவிட்டது. முஸ்லிம் லீக்கைவிட வகுப்புவாதமும், மாவோயிஸ்டுகளை விட அராஜகமும் அவர்களின் அடையாளமாகிவிட்டன.

காங்கிரஸிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பா.ஜ.க அடிப்படை வசதிகளைப்பெருக்கி லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. கேரளாவில் அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில்களும், அம்ருத் பாரத் ரயில்களும் கேரளாவுக்குக் கிடைத்துள்ளன.

கேரளம் வளருவதற்கான ஒரு எடுத்துக்காட்டு விழிஞ்ஞம் துறைமுகம். துறைமுகத்தைநான் திறந்து வைத்த 6 மாதங்களில் 150 பெரிய கப்பல்களும், 3 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்பட்டுள்ளன. கூடுதல் வேலைவாய்ப்பு ஏற்படுவதன் மூலம் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.

கேரளாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது ஊழல். கூட்டுறவுவங்கி மோசடி மூலம் சாதாரண மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துள்ளன இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகள். பா.ஜ.க ஆட்சிக்குவந்தால் அந்தப் பணம் திரும்பப்பெற்றுத்தரப்படும்.

நாடு முழுவதும் உள்ளவர்களுக்கு சபரிமலை ஐயப்ப சுவாமி மீது பக்தியும் நம்பிக்கையும் உள்ளன. ஆனால் சபரிமலையின் நம்பிக்கையையும், பாரம்பர்யத்தையும் இல்லாமல் ஆக்குவதற்குக்கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தியது இடதுசாரி அரசு. இப்போது சபரிமலையில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒன்றை நான் தெளிவுபடுத்துகிறேன். பா.ஜ.க கேரளாவில் ஆட்சி அமைக்கும். ஆட்சிக்கு வந்ததும் சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்ததாக இப்போதுகுற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். இதுதான் மோடியின் கேரண்டி” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...